இல்லங்களுக்கு உணவு வழங்கும் பணி

2021 இல் இல்லங்களுக்கு உணவு வழங்கும் பணியை ஆரம்பித்தோம்..!
மகிழ்வான தருணங்களிலும் , நீத்தாரை நினைவு கூறும் நாட்களிலும் பிற‌ருக்கு உணவளிக்கும் மரபின் அடிப்படையில் அன்பர்களால் வழங்கப்படும் நிதியை நாம் இல்லங்களுக்கு கொடுக்கின்றோம்.
ஒரு சில இல்ல‌ங்களுக்கு போதுமான நிதிக் கொடுப்பனவுகள் இருப்பதை காணக்கூடியதாக இருந்தபோதும் பல இல்லங்கள் இவ்வாறான கொடுப்பனவுகளை பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
எம்மோடு அடிப்படை தகவல்களை பகிர முன்வந்த இல்லங்களின் தொடர்பு இலக்கங்கள் www.emcharity.com காணக்கிடக்கின்றது.
நேரடியாக அவர்களோடு பேசுங்கள்..!
அன்பை பகிருங்கள்..!
இந்த திட்டத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்து ஒரு பாலமாக செயற்படும் திரு கஜன் சிவா அவர்களுக்கு எமது நன்றிகள்.
லண்டனில் எமது செவிகளுக்கு இசை விருந்தை அளிக்கிறார். தாயகத்தில் குழந்தைகளுக்கு உணவு விருந்தை அளிக்க காரணமாக இருக்கின்றார்.