வெபர் மைதானத்தில் 2022 பரா விளையாட்டு விழா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொடிய யுத்தத்தினாலும் ஏனைய விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகி கிராமங்கள், நகரங்களில் திறமை கொண்டபலர் மாற்று திறனாளிகள் என்ற வட்டத்துக்குள் வாழ்கின்றனர் .

இவர்களை சமூகமயப்படுத்தும் பணிகளுக்குப் பங்களிப்புக்களை நல்கி அவர்களுக்கு தொழில்முயற்சி ஊக்குவிப்புகளை வழங்கி, விளையாட்டுப் பயிற்சி வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி அவர்களது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்த விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தி விளையாட்டு சார்ந்த சிந்தனைகளைக் கட்டியெழுப்பவும் மிக கடுமையான பங்களிப்பை செய்கிறது DATA charity அமைப்பு .

இவர்களை சமூகமயப்படுத்தி, மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த விளையாட்டு விழாவினை DATA charity தொடர்ந்தும் நடாத்தி வருகின்றது .அத்தோடு இவர்களில் தொழில் முயற்சியில் ஈடுபடுவோரை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை எடுப்பதோடு ,மற்றவர்களும் இவாறு தொழில் முயற்சியில் ஈடுபடுவோருக்கு உதவவேண்டும் என்றும் DATA charity தொடர்ந்தும் உழைத்து வருகிறது.

சாதாரணமாக கிராமங்களில் நடக்கும் விளையாட்டுக்களை வேடிக்கை பார்க்கவும் வீட்டில் இருந்து வெளியே வராத இலங்கையின் வடக்குகிழக்கில் இருக்கும் பல மாற்றுத்திறனாளிகள் இந்த பரா ஒலிம்பிக் போட்டியின் மூலம் தேசிய சர்வதேச அளவில் பரிணமிக்க தொடங்கியுள்ளனர் ,இதற்கு வடக்கு கிழக்கில் முதன்முதலில் வித்திட்டது DATA charity அமைப்பு .

பலர் அவர்களை கண்டு கொள்ளத் தவறிய போதிலும் முதல் முறை 2016 ஆம் ஆண்டு இப் போட்டிகளில் வீரர்கள் தமது தனிப்பட்ட ரீதியில் உயரிய பங்களிப்புக்களை வழங்கி விளையாட்டின் எதிர்காலத் துக்காகச் சிறந்த அடித்தளம் இடப்பட்டுள்ளது.

இம் முறை திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள வடக்கு கிழக்கில் இருக்கும் 50 மாற்று திறனாளிகள் விளையாட்டுச் சம்மேளனங்களை திறமைகளுக்கமைய வகைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான வசதிகளைவழங்கி உரிய விளையாட்டில் ஈடுபட்டுள்ள வீரர்கள், வீராங்கனைகளின் திறமைகளை
மேம்படுத்தி அவர்களுக்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பயனளித்துள்ளமையை
மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறது DATA அமைப்பு.