உலக சுகாதார நிறுவனம் விடலைப்பருவத்தினை, 10-19க்கும் இடைப்பட்ட வயது என்றும், இப்பருவத்ததில் உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது. அவையாவன
அதிவேக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி.
உடல், சமூக மற்றும் மனரீதியான முதிர்ச்சி ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்படுவதில்லை.
பாலின சம்பந்தமான மற்றும் செய்கையில் முதிர்ச்சி.
எதையும் ஆராய்ந்து பரிசோதித்தல்.
வயது வந்த வாலிபர் என்ற மனநிலையை அடைத்தல், தான் ஒரு வாலிபன் என அடையாளம் கண்டடைதல்
மற்றவர்களை சார்ந்திருத்தல் என்ற நிலையிலிருந்து தன்னிச்சையாக செயல்படும் நிலையை அடைதல்.
வளரும் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள்
பருவமடைதல் (பூப்படைதல்) – இது 10லிருந்து 16 வயதிற்குள் ஏற்படுகிறது. அதாவது குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் இந்நிலையை அடைகின்றனர். உடலில், நடத்தையில் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப்பருவத்திற்கு மாறும் போது ஏற்படும் மாற்றங்களாவன
கைகள், கால்கள், புஜம், பாதங்கள், இடுப்பு மற்றும் மார்பு போன்றவை உருவில் பெரிதாக வளர்தல். உடலில் ஹார்மோன்கள் சுரத்தல். ஹார்மோன் என்பது ஒருவகை சிறப்பு இரசாயன தாதுப்பொருளாகும். இவை உடலில் எப்படி என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் உடல் எப்படி வளர வேண்டும் என்பதனை கட்டுப்படுத்துகின்றன.
உடலின் அந்தரங்க உறுப்புகள் (பாலினப் பெருக்க உறுப்புகள் அவை பெரிய அளவில் உருமாறி திரவங்களை உற்பத்தி செய்கின்றன.
தோல் பகுதி அதிக எண்ணையுடன் கூடியதாக மாறும்.
கை, கால்கள் மற்றும் அக்குள் பகுதிகளில் உரோமங்கள் தோன்றும்.