DATA அமைப்பின் கிழக்கு அலுவலகம் கடந்த 21ம் திகதி (வெள்ளிக்கிழமை) அன்று, மட்டக்களப்பு பழுகாமத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
DATA அமைப்பின் பணிப்பாளர் திரு.சி.சம்பந்தன் அவர்கள், அலுவலக பெயர்பலகையினை திரைநீக்கம் செய்தும், நாடா வெட்டியும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இதில் DATA அமைப்பின் பணிப்பாளர்களாகிய க.ஜீவராசா, த.விநாயகமூர்த்தி, பா.கோபிரஞ்சன், க.நிவாஸன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர் க.டிதுஷன் ஆகியோரும், சென்.ஜோசெப் பாடசாலையின் அதிபர் அ.பரிஷ்கரன், மட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளன செயலாளர் மற்றும் பொருளாளர், வெல்லாவெளி பிரதேச மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவரும், உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் சுழட்சிமுறை மேம்பாட்டுத் திட்ட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.











