அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை!

கடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசிகளை மக்களுக்குப் போட துவங்கியுள்ள நிலையில், இந்த மருந்துகளின் செயல் தன்மை மற்றும் செயல் வீரியம் போன்றவற்றை டேட்டாக்களின் (DATA) மூலம் அளவீடு செய்து உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

எல்லாத் தேவையான காரணிகளையும் பூர்த்தி செய்யும் நிலையில், இந்த தடுப்பூசிகள் இனி வரும் நாட்களில் உலக மக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும்.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி:
ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த-பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசி, ‘COVID-19’ ஐத் தடுப்பதில் 95% பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசியானது, இரண்டு படி நிலைகளில் மூன்று வார இடைவெளியில் மனிதர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியானது, 94 டிகிரி பாரன்ஹீட் (70 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். அமெரிக்காவில், உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA)-வால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கரோனா தடுப்பூசி இதுவாகும்.

யு.கே (U.K.), அர்ஜென்டினா, சிலி மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளும் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 21 அன்று இதைப் பின்பற்றியது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது. பஹ்ரைன் (Bahrain), கனடா, சவுதி அரேபியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை இந்த தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் அளித்துள்ளன. இந்த தடுப்பூசி mRNA வை அடிப்படையாக கொண்டது. இந்த mRNA வானது குறிப்பிட்ட புரதங்களை உருவாக்குவதில் ஈடுபடுகின்றது . இது, தேவையான புரதங்களை கொண்டு கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய செயல்களில் வெற்றிகரமானது.

மாடர்னா தடுப்பூசி:
அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த மாடர்னா தடுப்பூசி mRNA வை அடிப்படையாக கொண்டது. இவற்றை தவிர்த்து, பயோடெக் நிறுவனம் மற்றும் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனமும் mRNA வை ஒரு தளமாகப் பயன்படுத்துகின்றன. மாடர்னா தயாரிப்பு நிறுவனம், அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து இயங்குகிறது. அரசுத்துறைகளின் ஒப்புதல் பெற்ற பின் பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும்.

இது, ‘கோவிட் -19′ ஐத் தடுப்பதில் 94.5% பயனுள்ளதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் போலவே, இதுவும் இரண்டு படி நிலைகளில் வழங்கப்படுகிறது. ஆனால், மாடர்னா தடுப்பூசியானது, மூன்று வாரங்களுக்கு பதிலாக நான்கு வார (28 நாட்கள்) இடைவெளியில் மனிதர்களுக்கு செலுத்தப்படுகிறது. மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை போல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அல்லாமல், மாடர்னா தடுப்பூசி குறைந்த அளவு 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.

ஆக்ஸ்ஃபோர்ட் -அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனிகா ஆகியவை இணைந்து தயாரிக்கும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியானது, இரண்டு படி நிலைகளில் 28 நாட்கள் இடைவெளியில் மனிதர்களுக்கு செலுத்தப்படுகிறது. இது, ‘கோவிட் -19‘ ஐத் தடுப்பதில் 70% பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

யு.கே (U.K.) மற்றும் அர்ஜென்டினா ஆகியவை ஆக்ஸ்ஃபோர்ட் -அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை டிசம்பர் 15 -திற்கும் மேல் அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரித்தன. இதை தொடர்ந்து, இந்தியாவும் மெக்ஸிகோவும் இந்த தடுப்பூசியை ஜனவரி மாதத்தில் அவசரகால பயன்பாட்டிற்கான அங்கீகரித்துள்ளன என்று டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் இந்த மருந்து ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மிகவும் அதீத குளிரில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை சேமித்து வைக்க வேண்டியதில்லை என்பதால், இது ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் மருந்துகளை விடவும் விநியோகிக்க எளிமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாரத் பயோடெக் நிறுவனம்:
இந்திய நிறுவனமான பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனமும் இணைந்து, ‘கோவேக்சின்’ எனப்படும் தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசி இரண்டு படி நிலைகளில் நான்கு வார இடைவெளியில் மனிதர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்தியா தனது அவசரகால பயன்பாட்டிற்கான இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெக்டர் இன்ஸ்டிடியூட் (Vector Institute)
அக்டோபர் 2020 இல், ரஷ்யா தனது இரண்டாவது கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. இந்த வெக்டர் இன்ஸ்டிடியூட் தடுப்பூசியானது, ரஷ்ய உயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது. உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷ்யாதான். முதன் முதலில் ரஷ்யா, ஸ்பூட்னிக்-5 என்ற தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஆக்ஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது. இந்த தடுப்பூசியானது, ‘கோவிட் -19‘ ஐத் தடுப்பதில் 92% பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கமலேயா ஆராய்ச்சி நிறுவனம்:

ரஷ்யாவின் சுகாதார அமைப்பின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், ஸ்பூட்னிக் வி (Sputnik V) என்ற கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசி ‘கோவிட் -19‘ ஐத் தடுப்பதில் 91.4% பயனுள்ளதாக இருக்கும் என்று நவம்பர் மாதம் ரஷ்யா அறிவித்திருந்தது. அதே மாதத்தில், ரஷ்யா தனது குடிமக்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்கத் தொடங்கியது என்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அதே பத்திரிகை, நவம்பர் முதல், பெலாரஸ், ​​அர்ஜென்டினா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளும் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசியை அங்கீகரித்தன என்று செய்தி வெளியிட்டிருந்தது. ஜனவரி 15 ஆம் தேதி, பராகுவே அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்ததாக ராய்ட்டர்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கன்சினோ தடுப்பூசி (CanSino vaccine)

கன்சினோ பயோலாஜிக்ஸ், பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜியுடன் இணைந்து, ‘கோவிட் -19‘ தடுப்பூசியை உருவாக்கியது. ஜூன் 2020 இல், கன்சினோ தடுப்பூசியானது (CanSino vaccine) சீனா இராணுவத்தால் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் பத்திரிகை (Reuters) செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சினோவாக் தடுப்பூசி (Sinovac)

சீன நிறுவனமான சினோவாக் பயோடெக் (Sinovac Biotech) SARS-CoV-2 இன் செயலற்ற பதிப்பிலிருந்து ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசி இரண்டு படி நிலைககளில் இரண்டு வார இடைவெளியில் 14 நாட்களில் மனிதர்களுக்கு செலுத்தப்படும் என்று லைவ் சயின்ஸ் முன்பு தெரிவித்திருந்தது. ஜூலை மாதம் அவசரகால பயன்பாட்டிற்கான இந்த தடுப்பூசியை சீனா அங்கீகரித்தது. இது, ‘கோவிட் -19‘ ஐத் தடுப்பதில் 78% பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைத்தது, ஆனால் எல்லா மக்களிடமும், இதன் செயல்திறன் 63% க்கு நெருக்கமாக இருக்கலாம் என்று பிரேசிலிய செய்தி நிறுவனமான எஸ்டேடோ செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.