மாற்றுத்திறன் நபர்களுக்கு தேவைப்படும் விடயம்

சர்வதேச ரீதியில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையிலான சிறுபான்மை குழுவினராக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

புறக்கணிப்பு, இழப்பு, பிரிவினை மற்றும் விலக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எளிதில் உள்ளாகக்கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள்.

20ஆம் நூற்றாண்டின் பிற்கால ஐம்பதாண்டு காலகட்டத்தில் பெரும்பான்மையான நாடுகள் மாற்றுத்திறன் நபர்களுக்கு (PWD) ஏதோ ஒருவிதமான உதவியை அளித்து வந்தன.

அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களின் முயற்சியால் மனித உரிமைகளின் கண்ணோட்டத்தில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு அறநிலையம் மற்றும் நிறுவன பராமரிப்பு அளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் இத்தகைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விளம்புநிலை குழுவினருக்கான பொறுப்பு எப்படியான சூழலில் உள்ளது என்பதை ஆராய தலைப்படவேண்டும் .