ஒரு கையுடன் விளையாட்டில் சாதிக்கும் கனேடிய வீரர்

கனடாவை சேர்ந்த ஒரு கையை மட்டுமே கொண்ட மாற்றுதிறனாளி வீரர் ஒருவர் கோல்ப் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்.

சாதனைக்கு உடல் பாதிப்பு ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், இவர் குறித்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

61 வயதாகும் அவரின் பெயர் லாரன்ட் ஹர்டுபைஸ் ஆகும். பிறந்த போதே அவருக்கு இடது கை மட்டுமே இருந்தது. அதனால் முடங்கி விடாமல் 11 வயது முதல் கோல்ப் விளையாடி வருகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற முதல் தர போட்டியில், நீண்ட தொலைவிலிருந்த குழியில் பந்தை ஒரே அடியில் தள்ளி அனைவரையும் பிரமிக்க அவைத்துள்ளார் இந்த வீரர்.