அங்கங்கள் அறுக்கப்பட்டு செயற்கை அங்கங்கள் பொருத்தப்பட்டு வாழ்வை நகர்த்தும் பல உறவுகள் எம்மோடு வாழ்கின்றார்கள். அவர்களை அன்றாடம் நாம் காண்கின்றோம்.
எங்கு இப்படியான செயற்கைக்கால்கள் கிடைக்கின்றன ?
அது எல்லோருக்கும் முறைப்படி கிடைக்கின்றதா ?
பாதங்களை இழந்தவர்களின் வாழ்வு குறித்தான சரியான புரிதல் நம்மிடமிருக்கின்றதா?
இந்தப் பாதங்கள் பழுதடைந்தால் அதை சீர்படுத்திக் கொடுக்கும் இடங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன ?
இது சக்கர நாற்காலிகளுக்கும் பொருந்தும் அவற்றை சீர்படுத்தும் இடங்கள் எவை? புதிய சக்கர நாற்காலிகள் எங்கெல்லாம் கிடைக்கும் ?
ஊன்றுகோல்கள் , வெண்பிரம்புகள் என மாற்றுத்திறனாளிகளை தாங்கி நிற்கும் பெரும் பணியைச் செய்யும் சுமைதாங்கிகள் குறித்தும் அவற்றை மாற்றுத்திறனாளிகள் எப்படி பெறுகிறார்கள் .
செயற்கைக்கால், பொய்க்கால் , பிளாஸ்டிக் கால் … இன்னும் என்னென்ன பதங்கள் இழந்த அவயவங்களை உயிர்பெற உச்சரிக்கப்படுகிறது ?