முதியவர்களிடம் வரும் மனச் சோர்வு ஜெரியாட்ரிக் மனச் சோர்வு என அழைக்கப்படுகிறது.
இது அபூர்வமாகவே கண்டறியப்படுகிறது அல்லது அபூர்வமாகவே இதற்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயதானவர்கள் பொதுவாகவே சோகமாக உணர்வார்கள் என்றும், இதற்குக் காரணம் அவர்களுடைய ஆரோக்கியப் பிரச்னைகள் தான் அல்லது அவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்திருப்பதுதான் என்றும் தவறாக எண்ணிப் பலர் மனச் சோர்வை வயதாவதன் ஓர் இயல்பான பகுதி என நினைத்துவிடுகிறார்கள்.
அதோடு பல வயதானவர்களும் தங்களுடைய பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறார்கள், ஒருவேளை மற்றவர்கள் தங்களைக் கேலி செய்வார்களோ அல்லது புறக்கணித்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள், அது அவர்களுக்கு மிகுந்த மனவலியை உண்டாக்கக் கூடும்.