சேனைத் தண்ணீர் அறிவியல்

மக்களிடையே சித்த மருத்துவம் இரண்டறக் கலந்த பழக்கவழக்கமாக மாறியுள்ளதை குழந்தை வளர்ப்புக் கலையில் பயன்படுத்தும் கருவிகள், உணவு மூலம் புரிந்துகொள்ளலாம்.

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பருவங்களான காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வாரனைப் பருவம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிற்றிற் பருவம், சிறுதேர் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், பொன்னூசல் பருவம், பந்தாடற் பருவம், சிற்றின் இழைத்தல் பருவம் – இவை நவீன குழந்தை மருத்துவம் குறிப்பிடும் Development milestone என்ற வளர்ச்சியின் நிலைகளை குறிக்கின்றன.

குழந்தைகளின் செங்கீரைப் பருவம் – Cooing, தாலப் பருவம் – bubbling மொழி வளர்ச்சி நிலையை (Language development Stage) குறிக்கும், சப்பாணிப் பருவம் – Palmar grasp, முத்தப் பருவம் – Sucking reflex – Fine motor development-யை குறிக்கும், அம்புலி பருவம், வாரணைப் பருவம், சிற்றிற் பருவம், சிறுதேர் பருவம் போன்றவை Gross motor development-யை குறிக்கும் என்பதையும் அந்த பருவங்கள் குறித்துக் குறிப்பிடப்படும் செய்திகள் மூலம் அறியலாம்.

சேனைத் தண்ணீர் அறிவியல்

  • சேய்த் தண்ணீர் என்றால் கருப்பட்டியை சுத்தமான தண்ணீரில் கரைத்து வடிகட்டிய திரவம். பிறந்த குழந்தையின் வாயில் மூத்த தாய்மாமன் இதைச் சில துளிகள் இடுவதை தொன்றுதொட்டு பழக்கமாகக் கொண்டுள்ளோம்.
  • சேய்த் தண்ணீர் இன்று சேனைத் தண்ணீராக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இது அறிவியல்பூர்வமானது என்பதை நாம் உணர வேண்டும்.
  • மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துத் தாள்களில் சர்க்கரை தண்ணீர் வழங்கக் கூடாது என்று கூறப்படுவது, நமது மரபு அறிவியல் பங்களிப்பை மக்களிடம் இருந்து பிரிக்க நினைக்கும் செயல். குழந்தை பிரசவித்த பின் ஏற்படும் உடல்வலியையும் அடிக்கடி வரும் அழுகையையும் நிறுத்த சேய்த் தண்ணீர் பயன்படும்.

சேய்த் தண்ணீர் தயாரிப்பு முறை

100 மி.லி. காய்ச்சி ஆறிய தண்ணில் 24 கிராம் கருப்பட்டி அல்லது சர்க்கரையைக் கலந்து பின்னர் கரைத்து வடிக்கட்டி, குழந்தையின் வயது – எடைக்கு ஏற்ப வழங்கினால் வலியால் ஏற்படும் அழுகை உடனே குறையும். சேய்த் தண்ணீர் என்ற சர்க்கரை தண்ணீருக்கு வலியை நீக்கும் தன்மை 5 நிமிடம் முதல் 7 நிமிடம் வரை இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்