அடிமுதுகு பகுதியை வலுவாக்கும் பயிற்சி

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு அடிமுதுகில் வலி அதிகமாக இருக்கும். அதிலும், தொடர்ந்து அதிக தூரம் வண்டியிலேயே பயணம் செய்ய நேரிடும்போது கை, கால், மூட்டு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் தசைகள் இறுகி வலி ஏற்படும்.

இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 20 நிமிடங்களில் செய்யக்கூடிய பயிற்சி உள்ளது. அந்த பயிற்சி தரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும்   வைக்க வேண்டும். இடது கையை முன்பக்கமாக நீட்டி தரையைத் தொடும்படி வைக்கவேண்டும்.

இப்போது, இடது கை மற்றும் வலது காலை மேலே உயர்த்த வேண்டும். கால்களை வளைக்க கூடாது. இப்படி 20 முதல் 30 தடவைகள் செய்ய வேண்டும். ஒரு பக்கம் செய்த பின்னர் 5 விநாடிகள் ஓய்வு எடுத்த பின்னர் மறுபக்கம் பயிற்சியை செய்ய வேண்டும்.

பலன்கள்: முதுகெலும்பு, முதுகில் உள்ள நரம்புகள் வலுவடையும். அடிமுதுகு வலி குறைவும். இரத்த ஓட்டம் சீராகும். முழங்கால் மூட்டுப் பகுதி வலுபெறும்.