கண் பார்வை குறைபாடு எதனால் ஏற்படுகிறது? எப்படி பாதுகாக்கலாம் ?

முன்னொருக் காலத்தில் முதியோர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த பார்வை குறைபாடு, தற்போது அதிகளவில் இளைஞர்களை பாதித்து வருகிறது.

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மொபைல் போன், லப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. இதனால் பலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 30 வயதைத் தாண்டியவர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 40 வயதைத் தாண்டியவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும், 50 வயதைத் தாண்டியவர்கள் 6 மாதத்துக்கு ஒரு முறையும் டாக்டரிடம் கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ஒருவரை அடையாளம் காட்டுவதற்கு முற்காலத்தில் ‘அந்த கண்ணாடிபோட்ட ஆள்’ என்று குறிப்பிடுவார்கள். அப்போது கண்ணாடி அணிந்தவர்கள் அந்த அளவுக்கு குறைவாக இருந்தார்கள். இப்போது அப்படி அடையாளம் காட்ட முடியாது. ஏன்என்றால், வீட்டிற்கு ஒருவரோ அல்லது வீட்டில் அனைவருமோ கண்ணாடி அணிந்தவர்களாக காட்சியளிக்கிறார்கள்.

ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை.

குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும்.

எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும். அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.

கண்புரை

கண்புரை வயதான காலத்தில் ஏற்படும் கண்புரையால் இந்த இழப்பு ஏற்படுகிறது. மெகுலர் டிஜெனரேசன் இந்த கண் பார்வை இழப்பு பொதுவாக 60 மற்றும் 60 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும். இது கண்ணின் மையப்பகுதியை பாதித்து பார்வை இழப்பை உண்டாக்குகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சரியாக படிக்க, எழுத மற்றும் வாகன ஓட்ட முடியாமல் அவதிப்படுவர்.

கண் பார்வை குறைபாடு

உங்களுக்கு மங்கலான பார்வை தெரிந்தால் முதலில் உங்கள் கண் பார்வையில் குறைபாடு இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்கான சிகிச்சைகளை உடனே செய்வதன் மூலம் நீங்கள் கண்பார்வை இழப்பு முற்றிலுமாக போவதை தடுக்கலாம்.

தொலைக்காட்சி பார்க்கும் பொழுதும், கம்ப்யூட்டரில் படிக்கும் பொழுதும், கம்ப்யூட்டரில் விளையாடும் பொழுதும் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்சோர்வு அடைவதைத் தவிர்க்கலாம்.

தினமும் சிறிதுநேரம் குழந்தைகள் வெளியில் சென்று விளையாட வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கூர்மையான குச்சி, பேனா போன்ற பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடவோ, ஓடவோ கூடாது. கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகள் பிளாஸ்டிக் லென்ஸ் அணிவது நல்லது.

கண் குறைபாடு தடுக்க

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.
ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக்கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.
பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெறும்.