பாதிக்கப்பட்டோருக்கு இடருக்கான மேலதிக நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை

கொரோனா தாக்கம் தற்போது அதிகரித்துவரும் நிலையில் சமுர்த்தி உதவி பெறுவோர், முதியோர் மற்றும் அங்கவீனர் கொடுப்பனவு பெறுவோர் தவிர்ந்து, அன்றாட உழைப்பாழிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்டோர் விவரங்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் மாவட்டச் செயலகங்களுக்கு இன்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர் ஊரடங்கினால் தொழில் இழந்து பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களோடு பாதிக்கப்பட்டோர்,பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ,வயோதிபர்கள் ,பெற்றோரை இழந்த பிள்ளைகள் ,பிள்ளைகளை இழந்த பெற்றோர் என அனைவரும் நலிவுற்றுள்ளனர் . அவர்களுக்கு அரசால் எந்தவொரு நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அரச உயர்மட்டம் அதிக சிரத்தை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

சமுர்த்தி நிவாரணம், முதியோர் மற்றும் அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு என்பன அரசால் வழமையாக வழங்கப்பட்டு வரும் செயற்பாடே . அவர்களுக்கும் இந்த இடருக்கான மேலதிக நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை.இதனை கருத்தில் கொண்டு அரசும் சம்பந்தப்பட்டோரும் அவர்களுக்கு உதவ வேண்டும்.