வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அத்தனை சந்தோஷங்களையும் இழந்து துன்பப்படும் அதே நேரம் அந்த இடத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்கின்ற நேரத்தில்
பாதிப்பின் தன்மையாலும் கொடுக்கின்ற அழுத்தத்தினாலும் அழுத்தப்புண் என்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
அவ்வாறு தள்ளப்பட்டு அதில் இருந்து மீளமுடியாமல் மரணத்தின் விளிம்பில் நின்று போராடுகின்றோம்.
அவ்வாறு போராடுகின்ற உறவுகளை எண்ணி வருந்துகின்றேன் என்னைப் போன்ற உறவுகள் இச்சமூகத்தில் இணைந்து வாழ வேண்டும் என்ற பேரவா இருந்தாலும் அவர்கள் அழுத்தப்புண்ணினால் அழுந்தி அழுந்தி அழும் நிலையை மாற்றுவதற்கு எம்மால் முடியவில்லை.
சமூகத்தில் இருந்து பிரிக்கப்படுகின்றார்கள், குடும்பங்களில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள்,
தனிமையில் வாடுகின்றார்கள்
இவ்வாறு மனதளவில் உளன்று
என்ன வாழ்க்கை இதை விட இறந்துவிடலாம் என்கின்ற வேண்டுதல்களோடு தனது குடும்பத்தை எண்ணி அழுது புலம்பும் உறவுகளின் உள்ள குமுறல்களை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
இவ்வாறு அழுத்த புண்ணினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்காக சிகிச்சைகளை பெற்று வாழுகின்ற உறவுகளை நினைக்கும்போதும் அவர்களுடைய கருத்துக்களை கேட்கும் போதும் மனம் கலங்கி நிற்பதோடு வெளிக்கொண்டு வர தயங்குகின்றோம்.
இத்தனைக்கும் அழுத்தப்புண் என்கின்ற துர்பாக்கிய நிலையினால் இறந்து போன 15 மேற்பட்டவர்களில் அத்தனை வலிகளையும் கண் முன்னே பார்த்தும் காப்பாற்ற முடியவில்லை என்ற கவலைகளோடு
அதில் இருந்து. தொடர்கின்றோம்.
அழுத்த புண்ணினால் எங்குமே செல்ல முடியாமல் படுத்த படுக்கையில் நாலு சுவருக்குள்ளே தங்கியிருக்க வேண்டிய நிலையில் துன்பப்படும் உறவுகளை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
சாதாரணமாக அழுத்த புண்ணுக்கான சிகிச்சை பெற்று வருகின்ற வைத்தியசாலைகளிலும் சரி ஏனைய இடங்களிலும் சரி அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றது தவிர அவர்களுடைய அழுத்தப் புண்களை அறவே மாற்றக்கூடிய ஒரு உயர் பெறுமதியான ஒரு மேலதிக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது அவர்களுடைய கருத்தாக இருக்கின்றது.
ஒரு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு நீண்டகாலம் முழுமையான சிகிச்சையை பெற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் அவ்வாறான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்று கேட்கின்ற சந்தர்ப்பத்தில்
அளிக்கக் கூடிய இடங்கள் இருந்தாலும் அச்சிகிச்சைக்காக பணத்தினை செலவு செய்ய கூடிய பொருளாதார வசதி இன்மையால் சிகிச்சை பெறமுடியாமல் துன்படுகின்றார்கள்.
இதுவரைக்கும்அழுத்தப்புண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள் இப் பாதிப்பு மரணத்தை தீர்மானிக்கும் என்று தெரிந்து கொண்டிருந்தாலும் என்ன செய்வது என்று ஒரு சூழ்நிலையில் அவர்கள் சாதாரண சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இவ்வாறு இருக்க நாம் அனைவரும் யோசிக்காது சாதாரணமாக அவர்களுக்கு பெற்றாடின் கோஸ் மருந்தை பாவிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடைய அழுத்தப் புண்னை நாங்கள் மாற்ற முடியுமா என்று கேட்டால் அது முடியாத விடயமாகும்.
இவ்வாறு இந்த அழுத்தபுண்ணின் விளிம்பில் நின்று போராடிக் கொண்டிருக்கின்ற உறவுகள் பலர் இருக்க
சிகிச்சைக்காக அவர்கள் பல இடங்களுக்கு செல்ல நீ செய்தால் என்ன அல்லது அவர் செய்தால் என்ன அந்த அமைப்பு செய்தால் என்ன இந்த அமைப்பு செய்தால் என்ன என்ற கருத்துக்கள் பதிவுகள்
நாம் ஒன்றை யோசிக்க வேண்டும் அவர்களுடைய அழுத்த புண் வலி ஒருபக்கம் அந்த அழுத்தத்தினால் மனவலி இன்னும் ஒரு பக்கமாக போராடுகின்றார்கள்.
உறவுகளே ஒருவருடைய வலியில் இருந்து காப்பாற்ற நாம் என்ன முயற்சியினை செய்கின்றோம் எவ்வாறான உதவிகளை எம்மால் செய்ய முடியும் என்று சிந்திப்போம்.
அழுத்தப்புண் என்கின்றது ஒரு சாதாரண விடயமல்ல அதை ஒரு பொருட்டாக எடுத்து அந்த அழுத்த புண்ணிலிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டுமானால் நாங்கள் உயர் பெறுமதியானது சிகிச்சை அளிப்பதோடு அவர்களுக்கு ஒரு விசேட பராமரிப்பையும் வழங்க வேண்டும் அவ்வாறு செய்யும் இந்த சந்தர்ப்பத்தில் தான் அவர்களுடைய உயிர்களை காப்பாற்ற முடியும்.
உதவும் நல்லுள்ளங்கள் பலர் கரம் கொடுக்க இருக்கின்றார்கள் பாதிக்கப்பட்ட உறவுகளே உங்கள் விடயங்களை வெளிக்கொண்டு வாருங்கள் தீர்வு கிடைக்கப்பெறும்
தட்டுங்கள் திறக்கப்பட
படும்
தொடர்து பயனிப்போம் உறவுகளே ….