இலங்கையின் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கோரிக்கைகளும் ,தேவைகளும் விடுக்கப்படும் சூழலில் சமூக பொறுப்புள்ளவர்களால் இந்த பாதிக்கப்பட்டோருக்கான தேவைகளை அரசிடம் கோரிக்கையாக முன்வைக்குமாறு, குரல்கள் (பாதிக்கப்பட்டொரின் குரல்கள் ) ஊடகம் கோரிக்கை முன்வைக்கின்றனர் .
நாடாளுமன்றத்தில் பாதிக்கப்பட்டோரின் குரல்களும் ஒலிக்க வேண்டும் ,அவர்களின் தேவைகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் புதிய உறுப்பினர்கள் கோரிக்கைகளாக முன்வைக்க வேண்டும் .
அவர்களுக்கான விசேட தேவைகளை அரசு மூலம் வழங்க நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் புதிய எம் .பி க்கள் கோரிக்கைகளாக நாடாளுமன்றத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்
போக்குவரத்து ,பொது இடங்களில் அணுகும் வசதிகள் ,முக்கிய இடங்களில் மொழிபெயர்ப்பு வசதிகள் ,மலசலகூட ஒழுங்குகள்,வேலைவாய்ப்புக்கள் என்பவற்றை பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள வசதிகளை ஏற்படுத்த வேண்டும் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் .
முக்கிய தேவையாக மலசலகூட அணுகும் வசதிகள் பொது இடங்களில் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்றவகையில் இல்லை என்பது பெரும் குறையாக உள்ளமையால் இதனையும் கவனத்தில் கொண்டு செயற்படுத்தவேண்டுமெனவும் ,பாதிக்கப்பட்டோர் குறித்தான அடிப்படை தேவைகளை நிறைவேற்றல்,பாதிக்கப்பட்டோருக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல் ,கொள்கை உருவாக்கம் மற்றும் சட்ட அமுலாக்கம் என பாதிக்கப்பட்டோரின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்தான விடயங்களை நாடாளுமன்றத்துக்கு எடுத்து செல்லவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்கும் குரல்கள் ஊடகம் நாடாளுமன்றம் செல்ல உள்ளவர்களுக்கு கோரிக்கை முன்வைக்கிறது .