மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டல் அமர்வு

எதிர்வரும் சனிக்கிழமை 22.02.2020 அன்று கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களோடு பயணிப்பவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் கே. நிவாசன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சமூகம் தொடர்பான புரிதலுக்காகவும் அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் சவால்களை வெளிக் கொண்டு வருவதற்காக முனைவதாகவும், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் தொடர்பில் கிழக்கு மாகாணம் தழுவிய இந்த விழிப்புணர்வுக்காக இந்தச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்,

தமது அமைப்புக்கு சமூக சேவைப் பிரிவிலிருந்து கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி கிழக்கு மாகாணத்தில் ஒட்டு மொத்தமாக 18 ஆயிரத்து ஒருவர் (18,001) மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதேவேளை வடக்கு மாகாணத்தில் ஒட்டு மொத்தமாக 20 ஆயிரத்து 17 பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது .

அதேவேளை யுத்தத்திற்குப் பின்னரான சமூக வாழ்வியலில் மாற்றுத் திறனாளிகள் அதிக சவால்களை எதிர்கொண்டுள்ளனர் , எனினும் அவை பொதுவெளியில் உரிய கரிசனைக்கு கொண்டு வரப்படாதது பெரும் கவலையளிப்பதாகவும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான வேலு குமுதினி தெரிவித்தார்.