பெண் தலைமைத்துவ குடும்பங்களை அணுகி எவ்வாறான உதவிகளை பரிந்துரைக்க முடியும்?

வட மாகாண மகளிர் விவகார அமைச்சிடம் பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்கும் எமது தளத்தின் மூலம் மக்களுக்கும் இந்த சமூகத்துக்கும் ,பாதிக்கப்பட்டவர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் சில முக்கிய விடயங்களை வினவி இருந்தோம் .

அந்த வகையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை அணுகி எவ்வாறான உதவிகளை அவர்களுக்கு பரிந்துரைக்க முடியும் என்ற வினாவை எழுப்பியபோது பல விடயங்கள் எமக்கு தெரிவிக்கப்பட்டது .அதாவது பெண் தலைமைத்துவ குடும்பங்களை அணுகுதல் என்பது உதவி மற்றும் வாழ்வாதார நோக்கம் எனின் கண்டிப்பாக கிராமிய மட்ட அணுகுமுறைகள் தான் சிறந்தது என எமக்கு பரிந்துரைக்கப்பட்டது.

எமது அமைச்சில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை நேரடியாக அணுகுவதற்குரிய பொறிமுறை காணப்படவில்லை.

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக குறித்த கிராமத்திற்குரிய பெண்தலைமைத்துவ குடும்பங்களை அணுகலாம் அல்லது மத்திய அரசாங்கத்திற்குட்பட்ட மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் குறித்த பிரதேசத்திற்குரிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் உருவாக்கப்படுகின்ற மகளிர் விவகார குழுக்களின் மூலம் பெண்தலைமைத்துவக் குடும்பங்களை அணுகலாம் எனக் கூறப்பட்டது .

இவர்கள் குறித்தான வடமாகாண சபையின் அல்லது அமைச்சின் கொள்கைகள், வழிகாட்டல்கள் என்னென்ன இருக்கின்றது என்ற நிலைப்பாட்டை வினவியபோது குறித்த விடயப்பரப்பானது அரசியல் அமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தில் மாகாண சபைக்கான ஒதுக்கப்பட்ட விடயங்களில்; உள்வாங்கப்படாத காரணத்தால் எமது அமைச்சிற்கு குறித்தொதுக்கப்படவில்லை. கொள்கை வகுப்பாக்கம் உருவாக்கப்படினும் அது சட்ட புஸ்ரீர்வ அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள சற்று பின்னடைவான நிலைமையே காணப்படுகிறது. ஏனெனில் அமைச்சு தன்னிச்சையாக இயங்கமுடியாத நிலையிலும் மத்திய அமைச்சுடன் இணைந்து பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் எமது அமைச்சிற்கு பயனாளிகள் ஏற்றுக்கொள்ளப்பட கூடிய கோரிக்கையுடன் வரும் பட்சத்தில் அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சினால் உதவி வழங்கக்கூடிய சமயத்தில்; உதவுவதுடன் தேவை ஏற்படும் பட்சத்தில் உரிய திணைக்களம் அல்லது நிறுவனத்தினருடன் இணைக்கும் வழிகாட்டியாகவும் செயற்பட்டு வருகின்றோம்.என தெரிவித்துள்ளனர் .