பாதிக்கப்பட்ட பெண்கள் வெறுமனே பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் காட்டப்படாமல் அவர்களின் சுயதொழில் முன்னேற்றங்களை மேம்படுத்தவும் அரசு உட்பட அனைவரும் முன்வரவேண்டும் .
வடக்கு மாகாணத்தில் தரிசாக கைவிடப்பட்டிருக்கும் அரச காணிகளை ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பகிர்ந்தளிக்கும்போது ,அந்த பெண்ணின் குடும்ப சூழல் செல்வச்செழிப்போடு வளம்பெறவும் அரச பொருளாதாரத்தில் மேம்பாட்டை அடையவும் வழிவகுக்கும் .
நேற்றைய தினம் குரல்கள் பதிவுக்காக யாழ்மாவட்ட மகளீர் சங்கங்களுக்கான தலைவி திருமதி சரோஜா சிவச்சந்திரனை சந்தித்தபோது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார் .
ஒவ்வொரு பெண்ணும் பொருளாதாரத்தில் ஈட்டும் வெற்றி நாட்டுக்கான வருமானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இது தொடர்பான விரிவான காணொளி நேர்காணலை விரைவில் நீங்கள் பார்வையிடலாம்.