வடக்கில் குடும்பங்களுக்கு தலைமைதாங்குதல் உள்ளிட்ட சமூகத்தில் முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள பெண்களுக்கு அம்மாகாணத்தின் முதற் பெண் ஆளுநர் என்ற வரலாற்றுப் பதிவைக் கொண்டுள்ள நீங்கள் எந்தவிதமான செய்தியை கூற தலைப்பட்டிருக்கின்றீர்கள்.
என்ற கொழும்பு ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் – முதலாவதாக வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுகொண்டிருக்கும் பெண்கள் சுயநம்பிக்கையை இழந்து விடக்கூடாது. அதனை மென்மேலும் அதிகமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான நம்பிக்கையின் காரணமாகவே அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த முடியும்.
தமிழ் பெண்களை பொறுத்தவரையில் கலாசாரம் பண்பாட்டு ரீதியாக தங்கி வாழும் மனப்பான்மையில் இருக்கின்றார்கள்.இந்த மனப்பான்மையே அவர்களை அனுதாபத்திற்குரியவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது.
ஆகவே தம்மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்ற போது அவர்கள் ஒவ்வொருவரும் சாதனையாளர்களாக மாறுவார்கள் – என ஆளுநர் நம்பிக்கையூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார் .