பாதிக்கப்பட்டோருக்கு சோலார் மின்சக்தி வாகனத்தை கண்டு பிடித்த கிளிநொச்சி மாணவன்

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவனான பிரணவன் என்பவர் மாற்று திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய வகையில் மூன்று சக்கர சோலார் மின்சார வாகனத்தை கண்டு பிடித்துள்ளார் .

முதலில் இரண்டு சக்கரத்தில் சோலார் மின் சக்தியில் இயங்கும் வாகனத்தை செய்து பார்த்தலில் நூறு வீதம் தான் வெற்றி  கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்  .

இருப்பினும் இதன் பயன்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக தேவைப்படுவதனால் மூன்று சக்கரத்தில் இயங்க கூடியதாக தற்போது வடிவமைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார் .

பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையினை கருத்தில்க் கொண்டு இவரால் அமைக்கப்பட்ட இந்த மூன்று சக்கர வாகனம் தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது .