DATA அமைப்பின் இயக்குனர்களுக்கும் நாமல் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் (MP) அவர்களுக்குமான சந்திப்பு DATA அமைப்பின் யாழ் அலுவலகத்தில் 04.10.2019ம் திகதியில் நடைபெற்ற போதுதே DATA அமைப்பினர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்கள்.
பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் தாக்கத்தினை செலுத்தவல்ல அதிகாரதரப்பின் பிரதிநிதிகளை DATA அமைப்பினர் சந்தித்து பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைகள் குறித்தான முழுமையான விளக்கத்தை அளித்து வருகின்றோம். அதனடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் (MP) அங்கஜன் இராமநாதன் அவர்களும் உடனிருந்தார்.
அதன்போது பாதிக்கப்பட்டோரின் பின்வரும் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
கோரிக்கைகள்
- கடும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கொடுப்பனவுகள் ரூபா 5000ல் இருந்து 10000 ஆகா அதிகரிக்கப்படல் வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளில் பல விளையாட்டு வீர / வீராங்கனைகளை இனங்கண்டு அவர்களுக்கான பயிற்சியளிக்கப்பட்டு, பரா ஒலிம்பிக்கில் பதக்கங்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை விளையாட்டுத்துறை அமைச்சினூடாக செயற்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது.
- அனைத்து மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும், மாகாணம் தழுவிய சம்மேளனமாக உள்வாங்கப்பட்டு, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசி அதற்க்கான தீர்வுகளை பெறும் வகையிலான அழுத்தங்களை மத்திய அரசுக்கு கொடுக்கக்கூடிய கட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பாக பேசப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகள் உருவாக்கம்
- மாற்றுத்திறனாளிகளின் தொழில் வாய்ப்பு தொடர்பாக பேசப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு
- அணுகும் வசதி
- பராமரிப்பு இல்லங்கள் நிறுவப்படல்
- வாழ்வாதாரம்.