பாதிக்கப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகள் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நடைமுறைப் படுத்துமாறு கௌரவ அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களிடம் DATA கோரிக்கை

பாதிக்கப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகள் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்துமாறு கல்வி ராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களிடம் DATA கோரிக்கை

1. பாதிக்கப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகள் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக உழைக்கும் வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் 10000.00 வழங்க வேண்டும்.

2. பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான ஒதுக்கீடுகள் போதுமானதாக வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து பொதுகட்டடங்களும் அணுகும் வசதி கொண்டதாக அமையப்பெற வேண்டும்.
பொது இடங்கள் அனைத்திலும் அணுகும் வசதி கொண்ட மலசல கூடங்கள் அமையப்பெற வேண்டும்.

4. அரச வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும்.

5. மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான மாகாண கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

6. மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

7. இலவச புகையிரத வண்டி சீட்டு வழங்கப்பட வேண்டும்.

8. காணிகள் மற்றும் வீடுகள் இல்லாமல் சிரம்ப்படும் பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக மாதிரி கிராம்ம் ஒன்று உருவாக்கப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

9. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லம் ஒன்று வடமாகாணத்தில் அமையப்பெற வேண்டும்.

10. ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ சஜித் பிறேமதாச மற்றும் மான்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவர்களையும் சந்தித்து பாதிக்கப்பட்ட சமூகத்தின் விடயங்களை கலந்துரையாடுவதற்கான சந்தர்பத்தை தாங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.

ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு மாநாட்டின் பிரகடன புத்தகம் அமைச்சர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.