வடமாகாண சமூகசேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி வனஜா
செல்வரத்தினம் அவர்கள் தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கு
வழங்கிய நேர்காணல்
1. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தினுடைய மாகாண
சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளராக இருக்கிறீர்கள் இந்த
மாகாணத்தில் சமூக சேவைகள் திணைக்களத்தின் அடிப்படை பணிகள்
என்னவாக இருக்கின்றன?
சமூகத்திற்கு தேவையான நலிவுற்ற மக்களுக்கு சேவைகள் செய்கின்ற ஒரு
திணைக்களமாக இத் திணைக்களம் காணப்படுகின்றது. அதிலும்
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்தவர்களை எவ்வாறு
முன்நகர்த்தி செய்யலாம் என்பதற்கான வேலைத்திட்டங்கள்,
நடவடிக்கைகள், கடமைகள் தான் எமது திணைக்களத்தில் செய்யப்பட்டு
வருகின்றது.
முதியோர்கள் என்பவர்களுக்கு அப்பால் வாழ்வாதாரத்தில்
வறுமைக்கோட்டிற்கு மிகவும் அடிநிலையில் இருக்கின்றவர்களுக்கான
உதவித்தொகை என்பது ஒவ்வொரு மாகாணத்திலும் சமூக சேவைகள்
திணைக்களத்தின் ஊடாக தான் கொண்டு செல்லப்படுகின்றது.
அதனைவிட முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் சார்ந்த புதிய
திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக பல்வேறுபட்ட
செயற்திட்டங்களும் எமது திணைக்களத்தினால் முன்நகர்த்தப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகள் சார்ந்த அமைப்புக்களுக்கான உதவித்திட்டங்கள்,
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் குறிப்பாக
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரகம்,தலசீமியா போன்ற
நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குதல், முதியோர்
சங்கங்களுக்கான கொடுப்பனவுகள், விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில்
ஏற்படுத்துவது கூட எமது திணைக்களத்தினுடைய பாரிய பொறுப்பாகவும்
கடமையாகவும் காணப்படுகின்றது.
2. போரினால் மிகவும் சிதையுண்ட அல்லது பாதிக்கப்பட்டவர்களின்
அடிப்படை தேவைகள் எந்த அளவில் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கின்றன?
இது ஒரு பதில் தரக்கூடிய விடயமாக காணப்படவில்லை. ஏனெனின்
போரினால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை என்பது இது வரை
எவராலும் சரியான வகையில் பெறப்படவில்லை என்பது தான் இங்கு
சொல்லப்பட வேண்டும்.
எமது திணைக்களத்தினை பொறுத்த வரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான
தேவைகள் அறியப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கான வீட்டுத்திட்டம்
குறிப்பாக ஒவ்வொரு கலந்துரையாடலுக்கும் செல்கின்ற போது நான் தனி
ஒருத்தியாக நின்று அவர்களுடைய பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில்
கூறவேண்டிய சமூக பொறுப்புடையவராக காணப்பட்டாலும் கூட எமது
திணைக்களத்திற்கென இருக்கின்ற சில வரையறைகள் இவற்றை மீறி எமது
திணைக்களத்தினால் செய்யப்பட முடியாது ஆயினும் அவர்களது தேவை
எமது திணைக்களத்தில் முற்று முழுதாக அறியப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
வீட்டுத்திட்டம் என்பது பாரிய சவாலாக காணப்படுகின்றது.
இத்திட்டமானது மத்திய அரசாங்கத்தினால் பிரதேச செயலகங்களுக்கு
ஊடாக வழங்கப்படுகின்ற விடயமாக காணப்படுகின்றது.
ஆயினும் அது மாற்றுத்திறனாளிகளுக்காக புள்ளிவழங்கல் திட்டங்களிலே
முன்னுரிமை வழங்கப்படுகின்றன. ஆனாலும் அந்தந்த பிரதேச
செயலகங்களுக்கு வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டங்களின் எண்ணிக்கை
மட்டுப்படுத்தப்படுகின்றபடியினால் சில வேளைகளில் முற்றுமுழுதாக
மாற்றுத்திறனாளிகள் உள்வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக
காணப்படலாம்.
இவ் விடயம் மத்திய அரசாங்கத்தின் கைகளில் காணப்படுகின்றது. ஆயினும்
நான் சில பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடுகின்ற போது அவர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுக்கப்படுகின்ற புள்ளியிடல்
காணப்படுகின்றது. புள்ளியிடுகின்ற போது அதையும் தாண்டி வேறு
விடயங்களுக்கு புள்ளி வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு
வீட்டுத்திட்டங்கள் போய் சேருகின்றன.
ஆகவே வீட்டுத்திட்டங்கள் என்ற வகையில் பார்க்கின்ற போது
மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டுத்திட்டம் அரசாங்கத்தினால்
அறிமுகப்படுத்தப்பட்டால் தான் அவர்களுடைய முற்றுமுழுதான தேவையை
பூர்த்தி செய்யலாம்.
ஒருமித்து எல்லோருடைய தேவைகளின் மத்தியில் மாற்றுத்திறனாளிகளை
கவனிக்கின்ற போது அவர்கள் தனியொருவராக இருந்தால் அதற்குரிய
புள்ளிகள் குறையும். ஆகவே அவர்களுடைய தேவை
அறியப்படுத்தபட்டிருக்கின்றது.
இலங்கையில் மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என இரண்டு
இருக்கின்றது. அதில் சில நியதிகள் மற்றும் அதிகாரங்கள் எமக்கு மத்திய
அரசாங்கத்தில் இருந்து மாகாண அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை.
ஆகவே இதற்கான முழுமையான அதிகாரங்கள் எமக்கு வழங்கப்பட்டு
இப்படி ஒரு வேலை சமூக சேவைகள் திணைக்களத்திற்கு
பொறுப்பளிக்கப்படுமாக இருந்தால் மாற்றுத்திறனாளிகளுடைய
வீட்டுத்திட்டம் என்கின்ற தேவையை பூர்த்தி செய்யலாம்.
அதைவிட எல்லோருக்கும் தெரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான
மலசலகூடம் என்பது பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. அது
ஒவ்வொரு கட்டங்களிலும் ஒவ்வொருவருக்கும் இதைப்பற்றி பல்வேறுபட்ட
வழிகளினூடாக நாம் தெரியப்படுத்தியிருந்தாலும் கூட முற்றுமுழுதாக
அதனை நிவர்த்தி செய்யகூடிய நிதி வசதி எமது திணைக்களத்தில்
காணப்படவில்லை.
எமது திணைக்களத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட
மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூடத்தின் விண்ணப்பங்கள்
காணப்படுகின்றது. ஆனால் எமக்கு ஒவ்வொரு வருடமும் பத்து மில்லியனை
மிஞ்சாத வகையில் தான் மலசலகூடத்திற்கான நிதி ஒதுக்கீடு
காணப்படுகின்றது. பாராளுமன்ற அளவிலோ, அரசாங்கத்தை அழுத்தம்
கொடுக்கின்ற வகையிலோ அதற்கான நிதியை தனிப்பட்ட வகையில்
பெற்றுத்தரும் பட்சத்தில் தான் இதனை பூர்த்தி செய்யக் கூடியதாக
இருக்கும்.
பல்வேறுபட்ட இடங்களில் வாழ்வாதாரம் என்பது மிகவும் கேள்விக்குறியாக
தான் காணப்படுகின்றது. சார்ந்நிருப்பவர்கள் அல்லது குடும்ப தலைவன்,
தலைவி மாற்றுத்திறனாளியாக காணப்படுகின்ற போது அவர்கள்
எந்தநாளுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் காணப்படுகின்றார்கள்.
ஆகவே அவர்கள் நிலைத்து நிற்கின்ற வகையில் வருமானத்தை பெறக்கூடிய
திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் அவர்களுடைய வறுமை என்பது
இல்லாது ஒழிக்கப்படும். ஆகவே இவை மூன்றும் மிக முக்கியமான
விடயங்களாக காணப்படுகின்றது.
3. பாதிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் (உதாரணமாக
மலசலகூட வசதிகள்) வடக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 600
விண்ணப்பங்களுக்குமான விசேட அனுமதியை எடுப்பதற்கான வலு,
வலிமை தகுதி உங்களிடம் இருக்கின்றதா? உங்களால் செய்ய முடியாதா?
இல்லை இது சார்பாக எமது பிரதம செயலாளர் மற்றும் கௌரவ ஆளுனர்
அவர்களின் ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு செல்கின்ற பொழுது சில
சமயங்களில் அதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் கூட அரசாங்கத்தைப்
பொறுத்த வரையில் மத்திய அரசாங்கத்திற்கு அந்த பணத்தை விடுவிப்பதன்
ஊடாக தற்பொழுது கூட நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தின்
ஊடாக பாரியளவிலான நிதிகள் ஒதுக்கப்பட்டது.
அந்த வேளைகளில் கூட என்னால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு
ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் குறைந்தது ஐந்து மலசலகூடங்கள்
ஏனும் தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு விண்ணப்பித்த பொழுதிலும்
அந்தப் பணம் சாதாரண மலசலகூடங்களுக்காக அரசாங்க அதிபர்களுக்கு
கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
ஆகவே மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண சபைக்கென நிதி
ஒதுக்கப்படும் சந்தர்ப்பத்தில் தான் இதற்குரிய வேலைத்திட்டங்களை
செய்யலாம். இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற வட்டமேசை
கலந்துரையாடலில் கூட என்னால் கௌரவ ஆளுனார் அவர்களுக்கு
சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக எழுத்து மூல அறிக்கை
ஒன்று கௌரவ ஆளுனர் அவர்களுக்கு இன்றும் கூட
மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதி அனைத்து இடங்களிலும்
அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற விடயம், எவ்வாறு செயலாளர்கள்
மட்டத்தில் கடிதமாக அனுப்பப்பட வேண்டும் என்ற விடயம் மற்றும்
கௌரவ ஆளுனர் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டிய விடயம்
போன்ற வரைபு தயாரித்து 1996ம் ஆண்டு சட்டமும் இணைத்து கௌரவ
ஆளுனர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
ஆகவே இதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டப்படுகின்ற பட்சத்தில்
சாதகமான பதில்கள் கிடைக்கப் பெறலாம். ஆனாலும் தனித்து சமூச
சேவைப் பணிப்பாளர் மட்டும் கேட்கின்ற ஒரு விடயமாக தான் இது போன்ற
சில விடயங்கள் எமது திணைக்களமோ அல்லது எனக்கு ஒதுக்கப்பட்ட
பொறுப்பு என்பது போல தான் ஏனைய அதிகாரிகளோ பகுதியினரோ
காணப்படுகின்றனர். ஒருமித்த குரலாக வருகின்ற பட்சத்தில் இது
அமுல்படுத்துவதற்கு சாத்தியம் இருக்கின்றது.
4. பாதிக்கப்பட்டோருடைய எண்ணிக்கை குறித்தான அடிப்படை புரிதல்
கூட இன்னமும் இல்லை என்று சுயமதிப்பீட்டு மாநாட்டில் பெரிதும்
பேசப்பட்டது அந்த வகையில் உங்கள் சமூக சேவைகள் திணைக்களம்
மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறித்தான அறிக்கைகளை
வெளியிடுகிறீர்கள் ஆனால் அது ஏன் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன?
2018 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் 18572 என்ற எண்ணிக்கையே
இருந்தது. பின்னர் இப்பொழுது அது 2019 ஆம் ஆண்டில் 20011 பேர் என்ற
எண்ணிக்கை குறிப்பிடுகிறீர்கள் அதற்கு காரணம் என்ன?
இது போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற சொல்லப்பட்டு
மாற்றுத்திறனாளிகள் கூடியிருப்பது உண்மை. 2009ம் ஆண்டு முடிவிற்குக்
கொண்டு வரப்பட்ட போரின் பின்னர் 2018ல் இருந்த
மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையானது 2019ம் ஆண்டிலே 20011
என்ற எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்களில் இணைப்பு
செய்யப்பட்டிருக்கின்ற சமூக சேவை உத்தியோகத்தர்களினால்
பெற்றுக்கொள்ளப்படுகின்ற புள்ளிவிபரத்தின் படியான கணக்கீடு தான்
இது. ஐந்து மாவட்ட செயலகங்களிலும் அதுதான் காணப்படுகின்றது.
இதற்கு நாம் பல காரணங்களை கூறலாம்;.
1. போரினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் மாற்றுத்திறனாளிகளாகக்
காணப்படாது போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறிப்பாக முள்ளந்தண்டு
பாதிப்பு அந்த நேரம் அது ஒரு பிரச்சினையாக காணப்படாத போதும்
காலப்போக்கில் குறிப்பாக குண்டுவீச்சில் பீஸ் துகள்கள் தாக்கத்தினை
ஏற்படுத்தி நிரந்தர மாற்றுத்திறனாளியாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதனை நான் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நேரடியாக சென்று
பார்த்த விடயம்.
2. பிறப்பிலிருந்து மாற்றுத்திறனாளி ஆக்கப்படுபவர்கள். உதாரணமாக
ஓட்டிசம் பிறந்தவுடனேயே கண்டு பிடிக்கப்படாத விடயம். நான்கு, ஐந்து
வயதிற்கு பிறகுதான் அவர்கள் மாற்றுத்திறனாளி பிள்ளைகளாக கணிப்பீடு
செய்யப்படுகின்றார்கள்.
3. தங்களது சுய கௌரவம் காரணமாக விட்டில் இருக்கின்ற
மாற்றுத்திறனாளி பிள்ளை தான் என காட்டிக் கொடுக்காத பெற்றோர்கள்.
இதனை சமூக சேவை உத்தியோகத்தர்கள் ஏதோ ஒரு காரணத்தினால்
அறிந்து வீட்டிற்கு சென்று தரவுகள் பெற்றுக் கொள்கின்றனர்.
4. அதே போன்று முதியவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு கால்
முற்றாக அகற்றப்பட வேண்டிய தேவை இன்று அதிகாமானோருக்கு
உள்ளது. இதனால் வருகின்றவர்களும் மாற்றுத்திறனாளிகள்.
இவ்வாறான பல்வேறுபட்ட காரணங்களினால் மாற்றுத்திறனாளிகளின்
எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.
போருக்கு பின்னர் அதிகரிப்பதற்கு போர் மட்டும் காரணம் இல்லை.
தினம் தினம் விபத்துக்களினால் கூட பல்வேறுபட்ட மாற்றுத்திறனாளிகள்
உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை
இன்னும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது என்று தான் கூற
வேண்டும்.
5. பாதிக்கப்பட்டோரில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உழைக்கும்
வலுவற்றவர்கள் என்று கருத்தில் அவர்களுக்கான மாதாந்தம்
கொடுப்பனவுகள் எவ்வாறான கொடுப்பனவுகள் இருக்கின்றது? அது
எத்தனை பேருக்கு கிடைக்கின்றது?
மாற்றுத்திறனாளிகள் எல்லோருமே வலுவற்றவர்கள் என்பதனை நான்
ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனின் செவிப்புலனற்றவர்கள்,
விழிப்புலனற்றோர்கள் பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுபடுகின்றார்கள்.
அவர்களுக்கு பணம் என்பதை கொடுப்பதன் ஊடாக அவர்களது
வாழ்க்கையை விருத்தி செய்வது என்பது பிழையான விடயம். அவர்களுக்கு
ஆதாரமாக சில திட்டங்களைக் கொடுக்கலாம்.
மத்திய அரசாங்கத்தினால் 3,000 ரூபா பணத்தொகை கொடுக்கப்பட்டு
தற்போது 5,000 ரூபாவாக அதிகரித்து வழங்கப்படுகின்றது. அது 5,000
நபர்களுக்கு தான் 3,000 ரூபா வழங்கப்பட்டது. தற்பொழுது 10,477
நபர்களுக்கான கொடுப்பனவு விண்ணப்பங்கள் வடமாகாணத்தில் மட்டும்
தேங்கியிருந்தது. விண்ணப்பிக்கின்ற அனைவருக்கும் கிடைக்கின்ற
சாத்தியம் அனைத்து பிரதேச செயலகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றது.
மத்திய சமூக சேவைகள் திணைக்களத்தினால் தான் இந்த பணம்
கொடுக்கப்படுகின்றது.
மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தைப் பொறுத்தவரை நேரடியான
நிதிக் கொடுப்பனவுகள் என்பது இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு
வாழ்வாதாரம் நோக்கி கொடுக்கப்படவில்லை.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்திற்கு கீழ், இடுப்பிற்கு கீழ் இயங்க
முடியாதவர்களுக்கான கொடுப்பனவுகள் மாதாந்தம் வழங்கப்படுகின்றது.
அது மருத்துவ மற்றும் உணவிற்காக மட்டுமே வழங்கப்படுகின்றது. அது
வாழ்வாதாரத்திற்காக அல்ல.
நபீல்ட் பாடசாலை, இனிய வாழ்வு இல்லம், வாழ்வகம் ஆகியவற்றில்
வாழ்கின்ற பிள்ளைகளுக்காக நாளாந்தம் 50 ரூபா வீதம் எமது
திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது.
கடந்த வருடத்தில் இருந்து 75,000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி
திட்டங்கள் அது நேரடியாக பணமாக கொடுக்கப்பட மாட்டாது.
தொடர்ச்சியாக நிலைத்து நிற்கக்கூடியவகையில் செய்யப்படும் பட்சத்தில்
அவர்களுக்கான மூலப்பொருள் கொள்வனவு அதாவது கடல் தொழில்
செய்பவர்களுக்கான படகு, வலை கோழி வளர்ப்பினை
மேற்கொள்பவர்களுக்கான கோழிக்கூடு, கோழிக் குஞ்சு, உழுந்து அரைக்கும்
இயந்திரம், போட்டோ பிரதி இயந்திரம் இவ்வாறான திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு கடந்த வருடம் 68 பேருக்கான
உதவித்திட்டம் வழக்கப்படடிருக்கின்றது. இந்த வருடம் 4.5மில்லியன்
பெறுமதியான உதவித்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் எமக்குக்
கிடைக்கப்பெற்று வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இது நிரந்தரமான
வகையில் அவர்களுக்கு வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில உள்ளது.
அமைப்புக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக வன்னி
விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு நிரந்தர வருமானத்தை ஈட்டக்கூடிய
வகையில்; இரண்டு வருடங்களும் சேர்த்து ஒரு மில்லியன் ரூபா
பெறுமதியான இசைக்கருவிகள் கொள்வனவு செய்து எமது
திணைக்களத்தினால் வழங்கியிருக்கின்றோம்.
புதுக்குடியிருப்பில் 20 பேருக்கு இளநீர் விற்கின்ற திட்டம் அதாவது
இளநீரைக் கொண்டு செல்வதற்கான வண்டில், அதற்கான ஏனைய
பொருட்களும் மழை காலத்தில் நடமாடும் தேநீர் கடையாகவும் ஒரு
மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டு வெற்றிகரமாக
நடை பெற்று வருகின்றது.
இவர்களது ஒரு நாள் உணவு செலவிற்கு போதுமான வருமானத்தை
பெற்றுக் கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றது என நம்புகின்றோம்.
செவிப்புலனற்றோர் அமைப்புகளுக்கான பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள்
எமது திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.
6. நீட்டப்படும் உதவிக்கரங்கள் ஒரு நியாயமான வழியில் ஏற்றுக்
கொள்ளப்படக் கூடிய அளவில் அது பரந்து அனைவருக்கும்
கிடைக்ககூடியளவில் செயல்படுத்தப்படுகின்றனவா?
இது சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட
விழிப்புணர்வுகளின் அடிப்படையில் தான் செய்யப்படுகின்றது.
மாற்றுத்திறனாளிகளை குறை கூறுவது என்பது அல்ல எனது கருத்து.
பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் இலவசமாக வழங்கினால் வாழ்வோம்
என்ற ஒரு கருத்திலும் இருக்கின்றார்கள்.
அதனையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் பல்வேறுபட்ட
விடயம் கலந்துரையாடுகின்ற பொழுது இவ்வாறான திட்டங்களை
செய்வதைவிட பணமாக வழங்கினால் சுகமாக இருக்கும் என்ற விடயம்
காணப்படுகின்றது.
சுயதொழிலில் விருப்பமுடைய மாற்றுத்திறனாளிகளை நாம் பயனாளிகளாக
தெரிவு செய்கின்றோம். காலப்போக்கில் எமது திட்டம் தோல்வியடைந்து
விடக்கூடாது என்பதற்காக.
ஒன்பது மாகாண பணிப்பாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தில்
கூட நான் இது பற்றி கலந்துரையாடியிருந்தேன் வடமாகாணம் தான்
அதிகளவு மாற்றுத்திறனாளிகளை கொண்டிருக்கின்றது அந்த இடத்தில்
பாரியதொரு பொறுப்பு காணப்படுகின்றது.
நிதி ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற சுற்றறிக்கையில் 75,000 ரூபா
தான் தனிப்பட்ட வாழ்வாதாரத்திற்கு வழங்கலாம் என்ற வரையறை. அது
தொடர்பாக நான் அங்கு சுட்டிக்காட்டியிருந்தேன் 75,000ரூபா என்பது சிறிய
தொகை என்பதனை. 150,000 ரூபாவோ அல்லது 200,000 ரூபாவிற்கு மேல்
வழங்கப்பட்டால் தான் காலப்போக்கில் தோல்வியடையாது. அவர்களை
ஊக்கப்படுத்தும் ஒரு திட்டமாக அமையலாம். காலப்போக்கில் அது
மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. அவ்வாறாயின் சரியான
முறையில் பூர்த்தி செய்யப்படலாம்.
இதனைவிட 75,000 ரூபாவிற்கு மேலதிகமாக தேவை வருகின்ற போது
ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய பணத்தையும் சேர்த்து அத்
தேவையை நிறைவுசெய்கின்ற தன்மையும் காணப்படுகின்றது. ஆர்வமுள்ள
பயனாளிகள் அதிகமானோர் உள்ளனர்.
7. இந்த இடத்தில் சமூகம், மத்திய அரசு, மாகாண அரசு என்பவை என்ன
வகையான ஒரு பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்டோருக்குக் கிடைக்கும்
உதவிகளை சீராகக் கொண்டு செல்வதற்கு எவ்வாறான பொறுப்புகளை
நீங்கள் முன்னெடுக்கிறீர்கள்?
மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும்பாலான விடயங்கள் இலை மறை
காயாகத்தான் காணப்படுகின்றது. சிலருக்கு சில விடயங்கள்
தெரியாமையினை கடந்த வருடம் என்னால் கண்டறியப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல முதியோர்கள், சிறுவர்களுக்கான
உரிமைகள் மாகாண அரசாங்கத்தினால், மத்திய அரசாங்கத்தினால்
எவ்வாறன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என இந்த வருடம்
ஐந்து மாவட்ட செயலகங்களிலும், மாவட்ட சமூக வேவை திணைக்கள
அலுவலகங்களிலும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்று
கொண்டிருக்கின்றது.
ஐடுழு என்ற நிறுவனத்திடம் இருந்து இந்த வருடம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு
இருக்கின்றது. அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதற்கு அப்பால்,
அவர்களை சமூகத்தில் எவ்வாறு வெளிக்கொண்டு வரலாம், இவர்களது
உரிமைகள் என்ன என்று குறித்த ஒரு வகையினருக்கு பயிற்சியளிப்பதும்,
வெளி மாகாணங்களில் உள்ளவர்களுடன் எவ்வாறு இணைப்பது, உற்பத்திப்
பொருட்களுக்கான ஆயசமநவiபெ டுiமெiபெ அதனை எவ்வாறு
செயற்படுத்தலாம் போன்ற பல்வேறு விடயங்களை அவர்களுக்கு
தெளிவுபடுத்துதல் என்று அத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
பல்வேறுபட்ட அமைப்புக்கள் இயங்கி வருகின்றது ஆனாலும் அவை
நிலைத்து நிற்க கூடிய அளவிற்கு திட்டங்களை யாரும் செய்வதற்கு
முன்வரவில்லை. அது தான் உண்மை. மேல் மாகாணத்தைப்
பொறுத்தவரையில் இராணுவ வீரர்களுக்கான சீருடை தைக்கின்ற
ஊழஅpயலெ ஒன்று காணப்படுகின்றது.
அவ்வாறான தனியார் நிறுவனங்களை அல்லது தனியார் அமைப்புக்களை
இங்கு அறிமுகப்படுத்தி நிரந்தரமான வேலைத்திட்டத்தில் அவர்களை
உள்வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு இது ஒரு சவாலான விடயமாக
அமையலாம்.
வெளியில் இருந்து வருகின்ற நிறுவனங்களை இணைத்து பாரியளவிலான
ஒரு கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதனுடாக தான் அவர்களது
தேவையை பூர்;த்தி செய்யலாம்.
அதற்கு அரசாங்கமும் கவனம் எடுக்கலாம் என்னவென்றால் அச்சுவேலி
கைத்தொழில் பேட்டை மாதிரியான சில அமைப்புக்களை உருவாக்கி
மாற்றுத்திறனாளிகளை அதற்குள் உள்வாங்கி வேலை செய்கின்ற பொழுது
அவர்களது வாழ்வாதாரம் மேலோங்க செய்யலாம் என நான்
நினைக்கின்றேன்.
சுயமதிப்பீட்டு மாநாடு னுயுவுயு அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு
மலசலகூடம் சார்ந்த பிரச்சினைகள், அணுகும் வசதி சார்ந்த பிரச்சினைகள்
இவ்வாறான பல்வேறுபட்ட விடயங்கள் இந்த சமூகத்திற்கு
முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
வட்ட மேசை கலந்துரையாடலின் ஊடாக பல்வேறுபட்ட விடயங்கள் குறை
கூறுகின்றதற்கு அப்பால் சமூக சேவைகள் திணைக்களம் செய்யவில்லை
என்று ஒரு வகையினரால் கூறப்பட்டாலும் கூட அன்று பல்வேறு
அமைப்புக்களினால் எமது திணைக்களம் கிடைக்கின்ற நிதியில் ஏதோ
ஒன்று செய்கின்றது என்பதனை பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டு அது
சார்ந்த ஒரு வட்ட மேசை கலந்துரையாடல் நடைபெற்றது.
வட்ட மேசை கலந்துரையாடல், சுயமதிப்பீட்டு மாநாடு என்பன
அமைப்புக்கள் மற்றும் சமூக சேவை சார்ந்தவர்களுடன்தான்
நடாத்தப்பட்டிருக்கின்றது. எனது கருத்து பல்வேறுபட்ட தரப்பினரையும்
உள்வாங்குகின்ற போது கட்டாயம் சிறு மாற்றம் வந்தாலும் கூட அது
மாற்றுத்திறனாளிகளுக்கான சந்தர்ப்பமாக அமையும்.
வட்டமேசை கலந்துரையாடலில் கூட பணிப்பாளர் என்ற ரீதியில் நானும்
எனது திணைக்களத்தை சார்ந்த ஒரு உத்தியோகத்தரும் தான் அரசாங்க
உத்தியோகத்தர்களாக காணப்பட்டோம்.
அன்றைய தினம் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்
அதில் உள்வாங்கப்படுகின்ற போது இளம் சமுதாயத்திற்கு
பகிர்ந்தளிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அமையும்.
ஆனால் இத்தகைய மாநாடுகள், விளையாட்டு போட்டி, வட்டமேசை
கலந்துரையாடல்களை ஒழுங்கமைக்கின்ற போது இவர்கள் பற்றி
தெரியாதவர்களையும், அதிகாரங்களில் உள்ளவர்களையும் அழைத்தால்
தான் மாற்றுத்திறனாளிகள் பற்றிய செய்தி சென்றடையும் என்று
கூறுகின்றேன்.
பல்வேறுபட்ட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க
வேண்டும் என்ற உந்துதலும், உணர்வும் உள்ள ஒரு திணைக்களத்தில்
பணியாற்றுவதற்கு நான் மிகவும் மகிழ்வாக கடமையாற்றிக்
கொண்டிருக்கின்றேன்.
னுயுவுயு அமைப்பு பல்வேறுபட்ட வகையிலே உதவி செய்து
கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் ஊடாக
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மேன்மேலும் வளர வேண்டும் என்று
இறைவனிடம் வேண்டுகின்றேன்.