மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.அருள்மொழி அவர்கள் தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு வழங்கிய நேர்காணல்
1. மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள்? போரின் போது பெற்றோரை இழந்த பிள்ளைகள்
எத்தனை பேர்? போரினால் கணவனை இழந்து பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக இருப்பவர்கள் எத்தனை பேர்?
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அதாவது மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோத்தர்களின் தரவின்படி தற்போது சுமார்
7200 மாற்றுத்திறனாளிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றார்கள்.
இதன் தாக்கம் செலுத்தப்பட வேண்டிய நிகழ்வாக எப்போது
ஆரம்பமான தென்றால் யுத்தம் முடிவுறுத்தப்பட்ட பின்னர்
மாற்றுத்திறனாளிகள் கருத்தினை ஒரு பேசு பொருளாக மாற்றப்பட்டது. அது எவ்வாறெனின் நீண்டகாலமாக பயந்த ஒரு சூழலில் இருந்து விடுபட்டு வந்த பின்னர் தற்போது அது பெரியதொரு விடயமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதே போன்று போரின் போது பெற்றோரை இழந்த சிறுவர்கள் எத்தனைபேர் என்று சொல்வதற்கு என்னிடம் தரவுகள் இல்லை. இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரவற்ற சிறுவர்களுக்கான சிறுவர் இல்லங்கள் 32 உள்ளன. அதில் 700 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு
வருகின்றார்கள்.
யுத்தம் காரணமாக வறுமையாக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளும் பெற்றோரை இழந்த பிள்ளைகளும் 32 இல்லங்களிலும் கூடுதலான இருக்கின்றார்கள். இதில் 2 முஸ்லீம் இல்லங்கள். இவற்றுள் சுமார் 100
முஸ்லீம் சிறுவர்கள் எனின் மிகுதி 30 தமிழ் சிறுவர் இல்லங்களில் 600 தமிழ்vசிறுவர்களும் மொத்தம் 700 சிறுவர்கள் இருக்கின்றார்கள் இவையே
மட்டக்களப்பு மாவட்டத்தின் களநிலவரம். அதில் இருந்து நாங்கள் புரிந்து கொள்ள முடியும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தாய் மற்றும் தந்தையை
பிரிந்தவர்களின் பிள்ளைகளும் இதில் உள்ளனர்.
அதே போன்று பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைப் பொறுத்த வரையில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 27,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
உள்ளன. இதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எத்தனை பேர் என சொல்லத் தெரியவில்லை. அதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் போரினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதை சரியாக
சொல்வதற்கு என்னிடம் தகவல்கள் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுத் தான் சொல்ல வேண்டும்.
இதைவிட பொதுவான விடயத்தினை கூறுகின்றேன். இது எங்கேயும் கதைக்கப்படாத விடயமாகும். மட்டக்களப்பு பொதுசன மாதாந்த கொடுப்பனவு (பிச்சைச்சம்பளம்) கிட்டத்தட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 25,000 பேர் பெற்றுக் கொள்கின்றார்கள். அது பெரிய ஒரு தொகை,
ஆனால் இதனை எவருமே கருத்தில் கொள்ளாத ஒரு விடயம். இது குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. எனவே 25,000 குடும்பங்கள் மட்டக்களப்பில் இதனைப் பெற்று வருகின்றார்கள்.
கிட்டத்தட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சனத்தொகையினைப் பொறுத்த வரையில் 180,000 குடும்பங்கள் இருக்கின்றார்கள். இவற்றுள் ஆறில் ஒரு
பங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையிலும் வறுமையானவர்கள் இருக்கின்றார்கள். இது தான் யதார்த்தமாக இருக்கிறது.
அக் கொடுப்பனவு சிறியதொரு தொகை தான் 500 ரூபாவாக
வழங்கப்படுகின்றது. ஆனால் இதைப் பார்த்தீர்களாயின் 28,000 மக்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். மாதாந்தம் இதற்காக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 80,000,000 (எண்பது இலட்சம்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றது. வருடத்திற்கு 800,000,000 (எட்டு கோடிக்கு மேல்) கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றது.
மாற்றுத்திறனாளிகள் பற்றி நான் கதைக்கலாம் என்று நினைக்கின்றேன். இதில் விழிப்புலனை இழந்தவர்கள், செவிப்புலனை இழந்தவர்கள், கை இழந்தவர்கள், பேச்சுத்திறனை இழந்தவர்கள் என பல பாதிப்புக்களாக
பிரிக்கப்படுகின்றது.
இதிலும் முன்னாள் போராளிகள் அதாவது யுத்தத்தில் இருந்து மீண்டு வந்தவர்கள் என்பது தான் பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கின்றது. அவர்கள் நல்ல கட்டுக்கோப்பின் கீழ் இருந்து வந்தவர்களுக்கு அடுத்தகட்டம்
என்னவென்று தெரியாத நிலமையில் எதிர்பார்ப்புகளும் பேசுபொருளும் பெரிதாக இருந்தாலும் யதார்த்தம் என்பது கவலைக்கிடமாகத்தான்
இருக்கின்றது.
2. 14 பிரதேச செயலகங்களிலும் அந்தந்த மாற்றுத்திறனாளிகள் குழுக்கள்
(னுPழு) உருவாக்கி அதன்பின்னர் மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள்
ஒன்றியம் என்ற பெரும் அமைப்பை உருவாக்கியவர் என்ற ரீதியில் அந்த
அமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அது எவ்வாறு செயற்படுகின்றது?
மாற்றுத்திறனாளிகள் அமைப்பு என்று சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. நான் வவுணதீவு மண்முனை மேற்குப் பிரதேசத்தில் 2000ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக சேவையாற்றினேன். இந்தக் காலப்பகுதில் யுத்தம் மிகவும்
பயங்கரமாக நடைபெற்ற காலப்பகுதியில் அங்கு பணியாற்றினேன். 2006ம் ஆண்டு மட்டக்களப்பில் யுத்தம் ஓரளவிற்கு முடிவிக்கு கொண்டு வரப்பட்டது. 2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்கக் கொண்டுவரப்பட்டது. அக் காலப்பகுதியில் நான் வவுணதீவு மிகவும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அந்த காலப்பகுதியில் இருந்த பிரதேச செயலாளர் எனது துடிப்புத் தன்மையினைப் பாராட்டி மிகுந்த உட்சாகத்தினை வழங்கினார். அந்த காலப்பகுதியில் யுத்தத்தில் இருந்து மீண்டு வந்த பாதிக்கப்பட்ட, காயமடைந்த, அனைத்து இயக்கத்தையும் விட்டு மீண்டு வந்த மக்கள்
உண்மையிலைலேயே கஸ்ரத்தில் இருந்தார்கள்.
அதன் போது இரண்டு அவயவங்களையும் (கைகளையும்) இழந்த மாற்றுத்திறனாளி புவிராசசிங்கம் என்பவர் தன்னை போன்று உள்ளவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அவர்களும் சமூக நீரோட்டத்தில் இணைந்து எங்களாலும் சில விடயங்கள் செய்ய வேண்டும் என்று அவரைக் கொண்டு வவுணதீவு பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி
அமைப்பினை அமைத்து அதற்கு வாழ்வகம் என்ற பெயரை வைத்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக அவர்களுடன் மட்டுமே நான் இதனை மேற்கொண்டு வந்தேன். மாற்றுத்திறனாளி விழா என்றால் பெரிய விழாவாக
கொண்டாடுவோம். அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கொண்டு கிராமிய கலைகளும் நடாத்தி வந்தோம்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் முன்னாள் போராளிகளின் வருகை அதிகமாக இருந்தது. அதாவது புனர்வாழ்வு பெற்றவர்கள், புனர்வாழ்வு பெறாதவர்கள்
என்ற எல்லோரையும் அரவணைக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் பயங்கரமான சூழல் ஒரு பக்கம், பாதுகாப்பு கெடுபிடி இன்னொரு பக்கம்,
யார் எவர் என்பது தெரியாது இருந்தாலும் எங்களது மக்கள் என்ற ரீதியில் நான் எதுவும் பார்க்காமல் சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுடன்
இணைந்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பணியாற்றினோம். சில
பிரதேசங்களில் உருவாக்கப்பட்டது. பின்னர் 14 பிரதேச செயலகங்களிலும் கிழக்கு மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள் தான் உருவாக்கினார்கள்.
புவிராசசிங்கம் என்பவர் மட்டக்களப்பு மாவட்ட ரீதியாகவும் நாம் ஒன்று சேர வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்தும் 5 பேரை அழைத்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் அமைப்பினை உருவாக்கினோம். இதன் பின்னர் அரசாங்கமே அதனை அங்கீகாரமாக்கி இலங்கை பூராகவும் இவ்வாறான மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினை
உருவாக்கினார்கள்.
மத்திய அரசு திணைக்களத்தினால்; கிராம சேவகர் பிரிவு ரீதியாக சட்ட ரீதியான செயற்பாடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னரே நாம்
ஒவ்வொரு பிரதேச ரீதியாக உருவாக்கிவிட்டோம். அந்த நேரத்தில் இதில் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகள் ஏற்கனவே இருந்த தலைமைத்துவப் பண்பும் உதவியாக இருந்தது, இச் சங்கங்களை மிகக்
குறுகிய காலத்தில் வளர்த்துக் கொள்வதற்கு,
மாற்றுத்திறனாளி அமைப்பினை எடுத்துக் கொண்டோமானால் தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உப செயலாளர் அனைத்துமே
முன்னாள் போராளிகள் தான் பதவி வகிக்கின்றார்கள். அவர்களை கொண்டு சில திட்டங்களை நாம் செய்து கொண்டிருந்தோம். கூட்டங்களை நடாத்தினோம், சந்தாப்பணங்களைக் கட்டினோம.; இவ்வாறு மிகவும்
தலைமைத்துவம் கொண்டு ஏனைய மாற்றுத்திறனாளிகளையும் இணைத்துக் கொண்டார்கள். விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள், செவிப்புலன்
பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் என அனைவரையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு ஒரு சீரான பாதையில் அவர்கள் பயணிக்கத் தொடங்கினார்கள்.
இவ்வாறான அமைப்புகளை உருவாக்கியதன் மூலம் நமது சமூக சேவைக்கு மிக இலகுவான விடயமாக இருந்தது. அதாவது உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களை இணைத்து அவர்களது நிலைமைக்கு ஏற்றவாறு
எவ்வாறான விடயங்களை செய்ய வேண்டும் என்று இனங்காட்டினார்கள். அதே போன்று சமூக சேவை திணைக்களத்துடன் இயங்கிக் கொண்டிருந்த
நிறுவனங்களையும் ஒன்றாக்கி அதாவது மாற்றுத்திறனாளிகளுக்காக
பணிபுரிகின்ற நிறுவனங்கள், அமைப்புக்கள், சமூக சேவை திணைக்களம் இவை அனைத்தும் ஒரு குடையின் கீழ் பணியாற்றத் தொடங்கினோம். னுளையடிடந யுஉவழைn ஊழஅநவல (னுயுஊ) கீழ் ஒவ்வொரு மாதமும்
கூடி கதைத்து மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவாறு இருந்தது. பெரியதொரு வெற்றிகரமான நடவடிக்கையாகத் தான் அந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளினுடைய செயற்பாடுகள் எங்களுக்கு அந்த காலப்பகுதியில்
இருந்தது.
3. மட்டக்களப்பு ஒரு நீண்ட பிரதேசம் அந்தப் பிரதேசத்தில் வசிக்கக்
கூடிய மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் சவால்கள் எப்படி
இருக்கின்றன?
சவால் என பார்ப்போமானால் அந்தக் காலப்பகுதியில் பாதுகாப்பு பிரச்சினை இருந்த காலம். அதற்காக நாம் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியிருந்தது. சிலருக்கு தலைகுனிய வேண்டி இருந்தது. சிலருக்கு தலைநிமிர வேண்டியிருந்தது. அரச உத்தியோகத்தர் என்ற
வகையில் அது ஒரு பெரிய சவாலாக காணப்பட்டது.
மாற்றத்திறனாளிகள் புனர்வாழ்வு பெற்று வந்தாலும் அவர்களை பின் தொடர்ந்தார்கள் சிலர். அது இவர்களை மேலும் மேலும் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்த நிலைமையினை உருவாக்கியது. எமது மாற்றுத்திறனாளிகள்
முன்னாள் போராளியாக இருந்தவர்கள். இருந்தாலும் அதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சந்தித்தோம், சேர்ந்து
இயங்கினோம், அந்த இடத்தில் வெற்றியடைந்தோம். நீண்டகாலம் சென்றாலும் எல்லோரையும் வெளி கொண்டுவரக் கூடியதாகவும், அது
சாத்தியப்படக் கூடியதாகவும் இருந்தது.
தனிப்பட்ட ரீதியில் பார்த்தோமானால் நீங்கள் கூறியவாறு பெரியநிலப்பரப்பு தான் மட்டக்களப்பு மாவட்டம். போக்குவரத்து ஒரு சவாலாக இருந்தது. அதாவது முக்கிய இடங்களுக்கான போக்குவரத்து மட்டுமே
இருந்தது. வெல்லாவெளி, தாந்தாமலை வௌ;வேறான தூரத்தில் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து ஒரு சவாலாகவே இருந்தது.
அது தற்போது ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று மருத்துவ வசதியும் பெரும் சவாலாகவே இருந்தது. அதாவது வெல்லாவெளி, தாந்தாமலை இவ்வாறான பல பிரதேசங்களில் வைத்தியசாலை இல்லை, போக்குவரத்து பிரச்சினை மாற்றத்திறனாளிகளைப் பொறுத்தவரையில் அவர்களது வாழ்வாதாரமே ஒரு
சவால். இவ்வாறு இருக்க இவையே சவாலிலும் சவாலான விடயங்களாகும்.
அடுத்ததைப் பார்த்தோமானால் வறுமை. வாழ்வாதாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் போது நன்றாக இருக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்வாதாரம் போதுமானது இல்லை. முகாமால் வெளியேறிய பின்னர்
அன்றாட சாப்பாட்டிற்குக் கூட கஸ்ரப்பட்ட குடும்பங்களாகத்தான் இந்த மாற்றுத்திறனாளிக் குடும்பங்கள் வாழ்ந்தார்கள். வருமானம், போக்குவரத்து,
மருத்துவம் இவ்வாறான விடயங்கள் மிகவும் சவாலாக அமைந்தது. இணைந்து செயற்படுகின்ற நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று செயற்பட்டோம் அதில் வெற்றியடைந்தோம்.
மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் புனர்வாழ்வளிக்கப்படாதவர்கள், சிலர்
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள். புனர்வாழ்வளிக்கப்படாதவர்கள்
கடைசிவரை பயந்த சூழலிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்கள், குறிப்பிட்ட
சில காலம் வரை. அது தற்போதும் தொடர்கின்ற மாதிரி உள்ளது. அனேகமானோர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்கள்.
சவாலிலும் பெரும் சவால் புலம்பெயர் அமைப்புக்கள். எல்லோரையும் நான் கூறவில்லை. பிரதேசங்களுக்கான அமைப்புக்கள், மாவட்டத்திற்கான அமைப்பு உள்ளது இதனூடாக உதவிகளை செய்வதற்கு முன்வரவில்லை.
தமக்கு தேவையான அரசியல் வாதியிடம் பணத்தினை அனுப்பி அவரகள்; தமது அரசியலை வளர்ப்பதற்காக இதனை செய்து வந்தனர். அது கிடைத்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் கிடைத்தது. கிடைக்காதவர்களுக்கு
கிடைக்கவும் இல்லை. அதுவும் ஒரு பெரிய சவாலாக காணப்பட்டது.
சில நிறுவனங்களின் வேலைத்திட்டமானது எமது மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை இல்லாமல் ஆக்கப்பட்ட வேலைத்திட்டமாகவே காணப்பட்டது.
உண்மையிலேயே திறம்பட இயங்கிக்கொண்டிருந்த அமைப்புக்களின் தலைவர்களுக்கு தனிப்பட்ட சிலர்; உதவிகளை செய்து அவர் இதிலிருந்து பிரிந்து சென்று வேறொரு அமைப்பிற்கு பணங்களை வழங்கி குழப்பத்தை
உருவாக்கி இருக்கிறார்கள். காசு எங்கு வழங்கப்படுகிறதோ அங்கு சென்றார்கள். மாவட்ட அமைப்பு எதற்குமே இயலாத நிலையினை அடைந்துள்ளது. இதுதான் புலம்பெயர்ந்த அமைப்புகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடு என்றுதான் நான் கூறுகின்றேன். கட்டமைப்பு ஒன்றினை தாங்களே உருவாக்கி அதன் மூலமாக உதவிகளை
செய்திருக்கலாம். அது அனைவரையும் சென்றடைந்திருக்கும். ஆனால்
அவ்வாறு நடைபெறவில்லை. மாவட்ட அமைப்பு உடைந்த போது ஒரே நபர் ஏழு, எட்டு தடவைகள் உதவியினைப் பெற்றுள்ளார். உண்மையிலே பாதிக்கப்பட்டு உதவி தேவை என்பவருக்கு ஒருதடவையேனும் கிடைக்காத நிலைமை கூட இருந்தது. இதனை ஒரு பெரிய சவாலாகத்தான் நான்
கருதுகின்றேன்.
4. இவர்களுக்கான அரச உதவிகள் எந்த வகையில் கிடைக்கின்றன?
அதே வேளை புலம் பெயர்ந்த மக்களிடம் இருந்து எவ்வாறான உதவிகள்
வந்து கொண்டிருக்கின்றது.
பொதுவாக பார்த்தோமானால் பொது மக்களின் பொதுவான கருத்து என்ன கிடைத்திருக்கின்றது ஒன்றும் கிடைக்கவில்லை. தற்போது பார்த்தோமானால் இலவசத்தினால் தான் நாம் இவ்வாறு கெட்டு
குட்டிச்சுவராகியிருக்கின்றோம் இதுதான் தற்போதய நிலைமை. அரச உதவி கிடைக்காமல் இல்லை, ஆனால் அது ஒழுங்கான முறையில் கிடைக்கப் பெறவில்லை. ஒழுங்கான முறை என்றால் வாழக்கூடிய முறையில்
வழங்கப்படவில்லை.
பொதுவாக ஒரு நபரை எடுத்துக் கொண்டோமானால் கிட்டத்தட்ட பெருந்தொகையான பணங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. ஆனால் அவருக்கு உரிய நேரத்தில் அனைத்தும் ஒரே தடவையில் கிடைத்திருந்தால்
நல்லதொரு நிலைமையில் இருந்திருப்பார். அது அவ்வாறு கிடைக்கப் பெறவில்லை.
சமூக சேவை திணைக்களத்தை பொறுத்த வரையில் அனைத்து சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கும் எமது அலுவலகத்தால் வழங்கப்படுகின்ற 30,000
ரூபாவினை அனைத்து முன்னாள் போராளிகளுக்கும் வழங்கியிருந்தோம். சமூக சேவைத் திணைக்களத்தால் அனைவருக்கும் அந்த தொகை வழங்கப்பட்டது என்பதனை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். ஆனால் அவை போதாது ஏனெனின் 30,000 ரூபாவை கொண்டு என்ன
செய்ய முடியும். அவர்கள் இருந்த சூழல் வேறு மீண்டு வந்ததும் பெரும் கஸ்ரமான நிலைமை அந்த நேரத்தில் வாழ்வதற்கு 30,000 ரூபா என்பது போதாததாக காணப்பட்டது. ஆனால் எனக்கு அந்த நேரத்தில் சம்பளம்
40,000 ரூபா ஆனால் அவருக்கு எத்தனை நாட்கள் என்று கூறாமல் 30,000
ரூபா வழங்கியிருக்கின்றோம். அதனை யோசித்து பார்க்க முடியாமல் உள்ளது. அதே நேரம் புனர்வாழ்வு பெற்று மீண்டு வந்தவர்களுக்கு 25,000 ரூபா வழங்கப்பட்டதுடன் வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டது. அதே போல
புனர்வாழ்;வு, அரசாங்கம், அவர்களுக்காக இணைந்து பணியாற்றிய நிறுவனங்கள் ஆகியவற்றினால் உதவிகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனால் அரசாங்கத்தினால் உதவி கிடைக்கவில்லை என்பது பொய்யான
கருத்து. தரமான உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தகுந்த நேரத்திற்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான உதவிகளை நாம் ஒரே
தடவையில் வழங்கியிருந்தால் அவர்கள் பெரியதொரு நிலைமையில் வாழ்ந்திருப்பார்கள்.
அதாவது இரண்டாம் மாதம் 30,000 ரூபா வழங்கப்பட்டிருக்கும், ஐந்து மாதங்கள் கழித்து இன்னொரு நிறுவனம் 25,000 ரூபா வழங்கியிருக்கும், இன்னொரு நிறுவனம் 10,000 ரூபா வழங்கியிருப்பார்கள், பெனர்
கட்டியிருப்பார்கள், 40 புகைப்படங்கள் எடுத்திருப்பார்கள் இவ்வாறு அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்காகவும் வழங்கப்பட்டது. எனவே வழங்கப்படவில்லை என்பது இல்லை ஆனால் தகுதியான நபர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்பது உண்மை. அரச உதவி வேண்டிய அளவிற்கு
வழங்கப்பட்டிருக்கின்றது என்பதனை மறுக்க முடியாது.
நாம் ஆய்வு செய்திருந்தோம் கிட்டத்தட்ட பத்தரை இலட்சம் ரூபாவிற்குக்கிட்ட வழங்கப்பட்டடிருக்கின்றது. ஆனால் அதனை வழங்கிய நேரத்தை பார்த்தோமானால் அது அந்தந்த மாதத்திற்குதான் போதுமானதாக
காணப்பட்டது. அதனை வைத்துக் கொண்டு நாம் அவர்களுக்கு வழங்கிவிட்டோம் என்று கூறவும் முடியாது. ஆனால் அரசாங்க உதவி வழங்கப்படவில்லை என்றும் கூறவும் முடியாது. அவர்களது
வாழ்வாதாரத்தில் அவர்கள் நிலைநிறுத்தப்படவில்லை.
வழங்கப்பட்டிருக்கின்றது, ஆனால் சமூக நீரோட்டத்தோடு இணைந்து அவர்களால் வாழ்வாதாரத்தில் நிறைவு பெற முடியவில்லை என்பது தான்
உண்மை.
5. பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் எப்படியான சமூக
பிரச்சினையை எதிர் கொள்கின்றனர்?
பெண்கள், சிறுவர்கள் தொடர்பாக கேட்டிருக்கின்றீர்கள். அதற்கு நான் வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம் தான், நான் தற்போது கூறப் போகின்றேன். அது அரசியல் ரீதியாக எனக்கு பிரச்சினையினைத் தந்தாலும் சமூகக் கடமை என்ற ரீதியில் நான் கூற வேண்டும். களத்தில் இருந்து வேலை செய்பவர்கள் எமது உத்தியோகத்தர்கள்.
ஆனால் அங்கு சென்று பார்த்தோமானால் நான் அண்மைக் காலத்தில் ஒரு நபருக்கான புலம்பெயர் உறவுகளின் உதவித்திட்டம் ஒன்றினை கையளிப்பதற்கு சென்றிருந்தேன். உண்மையிலேயே பார்தோமானால்
மாவீரர் நாளை நினைவு கூறுகின்றோம். ஆனால் அது கொண்டாட்டம் இல்லை துக்கம். அதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்வதாக கேள்விப்படுகின்றோம். ஆனால் மாவீரர் இறந்தவர் இறந்து விட்டார். அந்தக் குடும்பம், பிள்ளைகள், மனைவிமாருக்கு என்ன செய்துள்ளீர்கள்? அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளீர்கள் அல்லவா நீங்கள். இவர்கள் நடுத்தெருவில் தான் நிற்கின்றார்கள்.
நான் அண்மையில் ஓர் இடத்திற்கு சென்றிருந்தேன். மூன்று பிள்ளைகள் அந்த மாவீரர் இறக்கும் போது ஒரு வயது, இரண்டு வயது, மூன்று வயது தான் இருக்கும், தற்போது அவர்களுக்கு 18 வயதாகிவிட்டது. அந்த தாய்
வறுமைப்பட்டு வறுமைப்பட்டு வளர்த்து வந்துள்ளார். தங்களது உதவி கிடைக்கவில்லை. ஆனால் மாவீரர் இல்லத்திற்குச் சென்று மாவீரர் தினத்தினைக் கொண்டாடுகின்றீர்கள். ஆனால் உங்களது உதவி
அவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த குடும்பத்தை பார்க்கவில்லை நீங்கள். என்னை நீங்கள் பிழையாக கதைப்பீர்கள் நான் யதார்த்தத்தைத் தான்
கூறுகின்றேன்.
இன்னோர் இடத்திற்குச் சென்ற போது ஒரு தாய் நான்கு பிள்ளைகளை போராட்டத்திற்காக கொடுத்துள்ளார். ஆனால் இன்று எந்த உதவியும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் வாழ்கின்றார். இவ்வளவும் நான்
நேரடியாக பார்த்த விடயங்கள். இதே போன்று நிறையப் பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றார்கள். வடக்கிலும் இருப்பார்கள். இவர்களை இனங்கண்;டு இவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஏனெனில்
வறுமையிலேயே இந்த பிள்ளைகளை வளர்த் தெடுத்துள்ளார்கள். இதனை
புலம்பெயர் தேசம் கண்டு கொள்ளவில்லை. அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. அது பற்றி கவலை இல்லை. ஏனெனின், அரசாங்கம் சில நடைமுறைக்குட்பட்டுத்தான் சில வேலைகளை வழங்கும். அது நிறைவு பெறாமல் இருக்கும், போதாமல் இருக்கும் அது தான் திட்டம். இங்கு
பார்ப்போமானால் யாருக்காகவோ போராடிய அந்தக் குடும்பம் வறுமையிலையே வாழ்ந்து வறுமையிலையே அடுத்த சந்ததியினரைக் காணப் போகின்றது. இவர்களைக் கண்டு கொள்ளவில்லை, உதவி செய்யவில்லை. இந்த வகையில் உண்மையில் இந்த பிள்ளைகளும்,
மனைவிமாரும் பாவம் செய்தவர்கள் என்று நான் நினைக்கின்றேன்.
6. அரச சமூச சேவை திணைக்களம் பாதிக்கப்பட்டவர்களின்
பிரச்சினைகளை இனங்காணவும் சேவை செய்யவும் முன்வரவில்லை என்ற
குற்றச்சாட்டு உண்டு இதனை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த வினா இக்கட்டான வினாவாக இருக்கின்றது. இந்த விடயம் தேசிய ரீதியாக அணுகப்பட வேண்டிய பிரச்சினை. 13வது திருத்தத் சட்டத்தில் மாகாண சபை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாகாண சபை
உருவாக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சமூக சேவைகளைப் பொறுத்த வரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் ஒன்றரை வசனத்தில் தான் உள்ளது இவ்வாறாகத் தான் கிழக்கு மாகாண சபைக்கு அந்த அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக
கூறுவோமானால் ஒன்றுமே வழங்கப்படவில்லை. இது மத்திய அரசாங்கத்திற்குக் கீழ் தான் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. சில திணைக்களங்களுக்கு நிறையவே வழங்கப்பட்டிருக்கின்றது. கிராம அபிவிருத்தித் திணைக்களத்தைப் பொறுத்த வரையில் முற்றுமுழுதாக
மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதே போன்று சிறுவர் திணைக்களத்தினை எடுத்துக் கொண்டோமானால். பாதி பாதி மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. சமூக சேவைகள் திணைக்களத்தைப் பொறுத்த வகையில் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தமாக ஒன்றுமே வழங்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அனைத்துமே மத்திய அரசாங்கத்திற்குத் தான்
வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தாலும், எமக்கு தரப்பட்டவற்றை வைத்துக் கொண்டு நிறைவான சேவையினை கிழக்கு மாகாண சபை வழங்கிக்
கொண்டிருக்கின்றது. அது எப்படியென்றால் நமது உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான
செயற்பாட்டினூடாக எமது கிழக்கு மாகாண சபை புயணநவவந மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை செய்ய வேண்டும் என்பது இல்லை.
நானும் இந்த மாகாணத்தில் பிறந்து வாழ்ந்து வருகின்றேன். இந்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற வகையில் எனக்கும் ஒரு தேவை இருக்கிறது. அதனால் நாம் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாங்கள் நினைத்தால் மாற்றுத்திறனாளிகள் தினத்தினை மார்கழி மாதம் 3ம் திகதி
நடாத்திவிட்டு இருக்கலாம், அத்தோடு அவர்களுக்கான உபகரணங்களை வழங்குதல் அதுதான் எமக்குத் தரப்பட்டிருக்கின்றது. இதைவிட செய்ய வேண்டாம் என்று எங்கேயும் கூறவில்லை. செய்ய வேண்டும் என்றும்
கூறுப்படவில்லை. ஆனால் மத்திய அரசிற்குக் கீழ் அவை அனைத்தும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எமது மாகாண சபை உத்தியோகத்தர் மிகவும் சிறப்பாக இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
உத்தியோகத்தர்களின் நிலைப்பாடு என்னவென்றால் மனப்பாங்கு கலியுகம் என்று சொல்லப்படுகின்ற வகையில் அதற்கேற்றவாறு தான் மாறிவிட்டது. இருந்தாலும் ஒரு சிலர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், என்ற நோக்கோடு நிறைய சேவையை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
எனது திணைக்களத்தைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லீம் என்று பாராது முஸ்லீம்களும் சிறப்பான முறையில் இந்த வேலைத்திட்டத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். அதே போன்று தமிழ் உத்தியோகத்தர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடத்து சேவை மனப்பாங்கு என்பது சில இடங்களில் பாத்தீர்கள் என்றால், அவர் தான் பெயர் எடுக்க வேண்டும், நான் செய்யாததை மற்றவர்களும் செய்யக் கூடாது, அது எமது வேலை இல்லை என தடுப்பது என்று தான் நினைக்கிறார்களே தவிர
அவர்களை விட சிறப்பாக வேலை செய்து காட்ட வேண்டும் என நினைக்கின்றார்கள் இல்லை இந்த உத்தியோகத்தர்கள்.
ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் சிறப்பான முறையில் வேலை செய்து
கொண்டிருக்கின்றார்கள். தனிப்பட்ட ரீதியில் என்பதை, பொறுத்த வரையில் DATA அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தியிருந்தது. வெற்றிகரமாக அமைந்த அந்த
மாநாட்டில் பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டு அவற்றை அனைத்து இடங்களுக்கு கையளிக்கப்படும் நடவடிக்கைகள் நடைபெற்ற வண்ணம்
உள்ளன. கிழக்கு மாகாணத்தில் மாநாடு ஒன்றை உடனடியாக நடத்த வேண்டியதேவைகளினை உணர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், (GA)மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் அமைப்பை தனிப்பட்ட ரீதியில
அழைத்து அதனை முன்னெடுத்து வருகின்றார்.
சமூக சேவைகள் திணைக்களத்திற்கு மிகக் குறைந்த நிதியே வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் 24 மணித்தியாலயம் மனநிறைவாக சேவையாற்றக்
கூடியவர்களாக இருக்கின்றார்கள் சமூக சேவை உத்தியோகத்தர்கள். இது
ஒரு வருமானம் தருகின்ற திணைக்களம் இல்லை. மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற திணைக்களம். இந்தத் சேவையை எமது
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லீம் சமூக சேவை உத்தியோகத்தர்கள் சிறப்பான முறையில் சேவையாற்றுகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவையாற்றுகின்ற ஏனைய
அமைப்புக்களுடனும் இணைந்து சரி சமமாக செயலாற்றி இச் சேவைகளை நாம் நிறைவாக எமது மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்கின்றோம்.
நாமும் அரச உத்தியோகத்தர்கள் தான். 13வது சட்டதிருத்தத்தை கருத்திற் கொண்டு சமூக சேவைகள்
திணைக்களத்தை வலுப் பெறுகின்ற திணைக்களமாக மாற்றக்கூடியவாறு இருக்குமாயின், அது மிக பெறுமதியான சேவைகளை நாம் ஆற்றக்
கூடியவாறு இருக்கும்.