உயிர்ச்சத்துக்களின் குறைவால் ஏற்படும் விளைவுகள்

உணவில் உயிர்ச்சத்து A குறைவால் ஏற்படும் முக்கியமான நோய்களாவன:

மாலைக்கண் நோய் (Night blindness) மூன்று நிலைகளில் சிகிச்சை செய்யப்படுகிறது

பின்வரும் நிலைமைகளை சரிபடுத்த வேண்டும். ஹைபோதெர்மியா, ஹைபோகிளைசீமியா, தொற்று நோய்கள், நீர்வற்றிப் போதல், தாதுப் பொருட்கள் நிறைந்த கரைசல், நீர்மத்தில் – தாது உப்புக்கள் சரிசமமாக இல்லாதிருத்தல், இரத்த சோகை மற்றும் பிற உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்கள் குறைபாடு நோய்கள்

உணவுத் தரம்

உணவுத் திட்டமிடுகையில், அந்தப் பகுதியில் கிடைக்கும் முக்கியமான உணவுப் பொருட்களைக் கொண்டு திட்டமிட வேண்டும். விலை குறைவானதாக, எளிதாக ஜீரணிக்கக் கூடியதாக, நாள் முழுவதற்கும் சரியான சரிசமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் மற்றும் உணவு உட்கொள்ளுதல் உணவு வேளைகளை அதிகரித்தல்.

மறு சீரமைப்பு

ஊட்ட நிலை மறுசீரமைப்பின் அடிப்படை என்பது செயல்முறையில் ஊட்டச்சத்து பற்றிய பயிற்சியை தாய்மார்களுக்கு அளிப்பதாகும். இப்பயிற்சியின் மூலம் குழந்தைகள் ஆரோக்கிய நிலையை மீண்டும் அடைவதற்கு தாய்மார்கள் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஊட்டம் நிறைந்த உணவை தயாரித்து குழந்தைகளுக்கு தருவதை, மேற்பார்வையிடப் படுகிறார்கள்.

தடுக்கும் முறைகள்

தாய்ப்பாலில் இருந்து மாற்று உணவுக்கு மாறுதல் குறைவான செலவில் மாற்று உணவு தயாரிப்பதில் வளர்ச்சி சத்துணவு கல்வி மற்றும் சரியாக உணவு உண்ணும் பழக்க வழக்கங்களை கடைபிடித்தல்.
ஆரம்ப நிலையில், உயிர்ச்சத்து A குறைவு ஏற்படும் போது, பாதிப்படைந்தவரால் குறைந்த வெளிச்சத்தில் தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்படும். கடுமையான குறைபாடு ஏற்படும் போது, பாதிப்புக்கு உள்ளானவர் குறைந்த வெளிச்சத்தில் பொருளை பார்க்கவே முடியாது.

நீர்க்கசிவற்ற கண் இமை இணைபடல அழற்சி (Xerosis Conjunctiva): கண் இமை இணை படலமானது வறண்டு, தடித்து, சுருங்கி, நிறம் மாறி தோற்றம் அளிக்கும். நிறமியின் செயலால் இமை இணை படலம் மங்கலாக தெளிவற்று புகை போன்று தோன்றும்.

நீர்க்கசிவற்ற விழிவெண்படல அழற்சி (Xerosis cornea): வறட்சி பரவி வெண்படலத்தை தாக்கும் போது, மங்கலாக பளபளப்பு இன்றி தோற்றம் அளிக்கும்.

பைடாட்ஸ் புள்ளிகள் (Bitot’s spots) : சாம்பல் நிறத்தில் மினுமினுப்புடன் வெள்ளை நிற தழும்பு போல புள்ளிகள் பொதுவாக முக்கோண வடிவில், இமை இணை படலத்துடன் இணைந்து இருக்கும் எப்பித்தீலியல் செல்கள், செதில்களாகி அதன் அமைப்பில் மாறுபட்டு தடிமனாகி விடுகிறது.

பாளிகுளர் ஹைபர்கெராடாசிஸ் (Follicular Hyperkeratosis) தோல் வறண்டும், கடினத்தன்மையுடன் இருக்கும்.
இதற்கான தேசிய அளவிளான நோய்த்தடுப்பு வைட்டமின் A குறைபாடு ஒழிப்பதற்கு (National prophylaxis programme) மாலைக்கண் நோய்க்கு 2,00,000 IU வைட்டமின் A (எண்ணெயில்) ஆறு மாதத்திற்கொருமுறை, பள்ளி பருவம் அடையாத (Preschool) பிள்ளைகளுக்கு அளித்தல்.