சத்துணவு மற்றும் ஆரோக்கியம்

உடலியக்கத்திற்கும், சீரான ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் போதுமான அளவுகளில் உணவுச் சத்துக்கள் உணவின் மூலமாக நம் உடலுக்கு அளிக்கப்படுகின்றன. அவை கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் நீர் ஆகும். பல்வேறு ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளுடன் தொடர்பு உடைய ஊட்டக்குறை நோய்களைப் பற்றி இங்கு காண்போம்.

புரதக் கலோரி குறைநோய் என்ற சொல் பரந்த உருவெளியில் பல்வேறு மருத்துவ நிலைகளில் மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் குவாஷியோர்க்கர், (சவலை) நோயும், மராஸ்மஸ் (நோஞ்சான்) நோயும் மற்றும் லேசான பாதிப்படைந்து வளர்ச்சி குன்றுதல் நோயும் முக்கியமாக கண்டறியப் பட்டுள்ளது. இந்நோய்கள் பால் அருந்தும் பழக்கம் நிறுத்தப்படும் குழந்தைகளிடத்தில் மற்றும் முன் பள்ளிப் பருவ குழந்தைகளிடத்திலும் இந்தியா மற்றும் பல வளரும் நாடுகளில் அதிகமான அளவில் பரவலாகக் காணப்படுகின்றது.

வறுமையின் விளைவாக உணவு பற்றாக்குறை அதிக மக்கள் நெரிசல், மற்றும் அசுத்தமான வாழ்க்கை நிலை, ஒழுங்கற்ற குழந்தை பராமரிப்பு முறை போன்றவை அதிக அளவில் புரத பாதிக்கப்படுவர். சவலை நோய் 18 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.