சவ்வு என்பது ரப்பர் போன்ற இழு நிலை அதிகம் கொண்ட ஒரு பகுதி, இது உடலில் உள்ள மூட்டுப் பகுதிகளில் அமைந்து நம் எலும்புகளை இயக்கங்களின் போது வழி நடத்துகிறது. இந்த இழுநிலை குறையும் போதோ அல்லது வேகமாக இயங்கும் போதோ, சவ்வுக் காயங்கள் ஏற்படுவது வழக்கம். பொதுவாக சவ்வு அடிபடுதல் அல்லது விலகுவதற்கு காரணங்கள்;
தொடர்ந்து ஏற்படும் அதிக அளவிலான இயக்கம்
விளையாட்டுகளில் ஈடுபடும் போது
முரட்டு தனமான செயல்பாடுகள்
வழுக்கி விழுதல்
சாலை விபத்துக்கள்
முதுமை
இது போன்ற பொதுவான காரணங்களால் சவ்வு விலகுதல், அடிபடுதல், கிழிந்து போகுதல் ஏற்படுகிறது. மருத்துவர்கள் காயத்தின் தன்மைகளுக்கு ஏற்ப இதற்கு சிகிச்சை அளிப்பார். சவ்வு பற்றிய விளக்கம் உங்களுக்கு போதுமான அளவுக்கு கொடுக்கப்பட்டு உங்களை மருத்துவர் சிகிச்சைக்குத் தயார்படுத்துவது அடுத்த கட்ட நடவடிக்கை. மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில் இது போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் நாட்டு வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெறுவது பொதுவான நடைமுறையாக இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் மட்டுமே பயன் கிடைக்கும். இது போன்ற முறைகள் அடிபட்டவரின் சவ்வுகளில் ஆழமான காயங்களை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் அவர்களை நோயாளியாக மாற்றிவிடும். இந்த மருத்துவ யுகத்தில் பல்வேறு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் இது போன்ற நாட்டு வைத்திய மருத்துவ முறைகளைத் தவிர்ப்பது நல்லது. சவ்வில் ஏற்படும் காயங்களை மருத்துவர்கள் மூன்று வகையாகப் பிரித்து சிகிச்சை மேற்கொள்வார்.