பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள்

ஊட்டச்சத்தின்மை, தாய்நலக் குறைவு, எய்ட்ஸ், மார்பகப் புற்று போன்ற நோய்கள், வீட்டு வன்முறை போன்ற பல பிரச்சினைகளை   பெண்கள் சந்திக்கின்றனர்.

ஊட்டச்சத்தின்மை

சத்துணவு ஒருவருடைய மொத்த ஆரோக்கியத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்தின்மையால் மனநலமும் உடல்நலமும் பெரும்பாதிப்பை அடைகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில், அதிக அளவு சத்துணவற்ற பெண்களைக் கொண்டுள்ள நாடுகளில் பல நாடுகள் உண்டு . ஆரம்ப வளரிளம் வயதினரில் இருபாலரும், ஏறத்தாழ ஒரே அளவிலேயே சத்துணவு உட்கொள்ளுகின்றனர். ஆனால் வளர்ந்த பின் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைகிறது.

தாய்க்கு ஊட்டச்சத்தின்மையோடு தாய் இறப்பு விகிதமும், குழந்தைகளின் பிறப்புக் குறைபாடுகளும் இணைந்துள்ளன. ஊட்டச்சத்தின்மைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பலன் ஏற்படும்.