தடுப்பு மருந்துகள் குறித்த தவறான தகவல்கள்

தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான தவறான தகவல்கள் (Misinformation related to vaccination) வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுகின்றன.

தவறான தகவல்கள் மற்றும் சதி கோட்பாடுகளை வேண்டுமென்றே பரப்புவதில் பொது மக்களும் பிரபலங்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்பூசி குறித்துப் பரப்பப்படும் தவறான தகவல்களால் தடுப்பூசி இட தயக்கம் பொதுமக்களிடையே ஏற்படுவதால், நோயின் தாக்கம் அதிகரிக்கின்றது.

தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக இருந்தபோதிலும், இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பலம் காரணமாகச் சமீப காலத்தில் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்கள் வெகு வேகமாகப் பரவுகின்றன .

தடுப்பூசிகள் தொடர்பான ஆதாரமற்ற பாதுகாப்பு கவலைகள் பெரும்பாலும் இணையத்தில் அறிவியல் தகவல்களாகப் பரப்பப்படுகின்றன.