அலைக்கழிக்கும் மனக்கோளாறுகள்

தர்க்க ரீதியான காரணங்கள் எதுவும் இல்லாத போதும் தங்கள் கைகளைச் சிலர் திரும்பத் திரும்பக் கழுவுவதையும், தேவையில்லாத போதும் திரும்பத் திரும்ப சுத்தப்படுத்துவதையும், குளிப்பதற்கு வழக்கத்துக்கு மாறாக பலமணி நேரங்கள் எடுத்துக் கொள்வதையும், புறப்படுவதற்கு அசாதாரணமாகப் பல மணி நேரங்களை செலவிடுவதையும், ஒன்றைச் செய்வதிலும் அதன் ஒழுங்கிலும் மிகவும் குறிப்பாக இருப்பதையும் அல்லது சிலர் சொல்லுவது போல் தாங்கள் நினைக்க விரும்பாத வன்முறை அல்லது பாலியல் எண்ணங்கள், படிமங்கள் போன்றவைத் திரும்பத்திரும்ப ஏற்படுவதையும் போன்ற அசாதாரணமான நடத்தைகளை நீங்கள் ஒருசிலரிடம் கண்டு வியந்திருக்கலாம். அப்படியானால் அந்த நபரை ஒரு உளவியல் நிபுணர் சோதித்தறிய வேண்டும். இவைகள் அலைக்கழிக்கும் மனக்கோளாறுகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.

அலைக்கழிக்கும் மனக்கோளாறு போன்றே காணப்படும் வேறு சில கோளாறுகளும் இருக்கின்றன. குறிப்பிடத்தக்க அளவில் மனக்கலக்கம் மற்றும் அந்த மனக்கலக்கத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று ஒரே மாதிரி நடத்தைகள் அல்லது மன வேலைகளில் ஈடுபடச் செய்யும் அலைக்கழிக்கும் கவலை ஒருசிலருக்குக் காணப்படும். எனவே சமீப காலமாக இவைகளும் அலைக்கழிக்கும் மனக்கோளாறுகள் நோய்த்தொகுதிகளோடு ஒருங்குவைத்து எண்ணப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்:

  • மறைப்பெண்ணக் கோளாறு (உடைமைகளைப் பிரிவதில் மிகவும் சிரமம்)
  • உடல்வடிவ அதிருப்திக் கோளாறு (உடல் வடிவம்/உறுப்பு குறித்து மிகையாக  அதிருப்தி கொள்ளுதல்)
  • முடிபிடுங்கும் கோளாறு (முடிகளைப் பிடுங்குதலும் சில சமயம் உண்ணுதலும்)
  • தோல் உரிக்கும் கோளாறு