நீங்கள் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டியவைகள்

நமது குடும்பங்களையும், சமூகத்தினரையும் கொரோனா வைரசிலிருந்து (COVID-19) பாதுகாக்க நம்மால் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள் உள்ளன:

உங்களுடைய கைகளைத் தவறாமல் கழுவவும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது கைச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும். மேற்பரப்புகளின் மீது அநேக நாட்களுக்கு உயிரோடு இருக்கக் கூடிய கோவிட்-19 -லிருந்து நம்மைப் பாதுகாக்க இது உதவும்.

மற்றவர்களிடமிருந்து குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளியில் விலகியிருக்கவும்.

நீங்கள் சுகவீனமாக இருப்பதாக உணர்ந்தால், பரிசோதனை செய்து கொள்ளவும். அத்துடன் வீட்டிலேயே இருக்கவும்.

உங்களுக்கிருக்கும் நோயறிகுறிகள் மிதமானவையாகவே இருந்தாலும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வது COVID-19 தொற்றுப் பரவலைக் குறைக்க உதவும்.

கொரோனா வைரஸ் (COVID-19) பரிசோதனை அனைவருக்கும் இலவசமாகச் செய்யப்படும்.

வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் புகலிடம் வேண்டுவோர் போன்ற மெடிகேர் (Medicare) அட்டை இல்லாதவர்களும் இதில் அடங்குவர்.

COVID-19 தடுப்பூசிக்கான தகுதி உங்களுக்கு இருந்தால், அதைப் போட்டுக்கொள்ளவும்.