நமது குடும்பங்களையும் சமூகத்தினரையும் கொரோனா வைரசிலிருந்து (COVID-19) பாதுகாக்க நம்மால் செய்யக்கூடிய முக்கிய விடயங்கள் உள்ளன:
உங்களுடைய கைகளை அவ்வப்போது தவறாமல் கழுவிக்கொண்டிருங்கள். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது கைச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்துங்கள். மேற்பரப்புகளின் மீது அநேக நாட்களுக்கு உயிரோடு இருக்கக் கூடிய கொரோனா வைரசிலிருந்து (COVID-19) நம்மைப் பாதுகாக்க இது உதவும்.
அடுத்தவர்களிடமிருந்து குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளியில் விலகியிருங்கள்.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதது போல் இருந்தால், நோயறிவுச் சோதனையை மேற்கொள்ளுங்கள் (get tested) மற்றும் வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கிருக்கும் நோயறிகுறிகள் மிதமானவையாகவே இருப்பினும், ஆரம்பத்திலேயே நோயறிவுச் சோதனையை மேற்கொள்வது கொரோனா வைரசின் (COVID-19) பரவலைக் குறைக்க உதவும்.
கொரோனா வைரஸ் (COVID-19) நோயறிவுச் சோதனை அனைவருக்கும் இலவசமாகச் செய்யப்படும். வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், புலம்பெயர்த் தொழிலாளர்கள், மற்றும் புகலிடம் நாடிக்கொண்டிருப்பவர்கள் போன்ற ‘Medicare’ (மெடிகேர்) அட்டை இல்லாதவர்களும் இதில் அடங்குவர்.
தடுப்பூசிக்கான தகுதி பெற்றிருந்தால், அதை இட்டுக்கொள்ளுங்கள்.