மஞ்சள்: உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

மஞ்சளில் உள்ள அழற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. உடல் வலிகளை நீக்கப் பயன்படுகின்றன. எனவே, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அளவு மஞ்சளை உணவுகளில் சேர்த்து கொள்வது அவசியமாகும். பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள் உடலில் உள்ள நோய்க் கிருமிகளை அழிக்க பயன்படுகிறது. இதனால் வயிற்றுப் பிரச்சினைகள் நீங்கும்.

சர்க்கரைநோய்
உடல் அஜீரண பிரச்சினைகளுக்கு மஞ்சள் எடுத்துக் கொண்டால், குணமாகும். வாயு பிரச்சினைகளும் நீங்கும். கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடைகின்றன. குர்குமின் இதைத் தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆன்டிசெப்டிக்
மஞ்சள் கலந்த பால் கீழ்வாதத்தை குணமாக்கும். முடக்கு வாதத்தின் காரணமாக உண்டாகும், வீக்கத்தையும் குறைக்கும். மஞ்சள் இயற்கையான பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும், ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுகிறது.

இதய நோய்
மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற மூலப் பொருள் உள்ளது. இதுதான் மஞ்சளின் மருத்துவத்தன்மைக்கு முதல் காரணம். இந்த மூலப்பொருள், நோய்கள் உடலில் வராமல் தடுக்கிறது. அத்துடன் இதய நோய்கள், முடக்கு வாதம், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது.

எலும்பு வலி
தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்து வளைவுத் தன்மையை அதிகரிக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும். ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் ஏராளமாக உள்ளது.

மறதி நோய்
சீரான மூளை செயல்பாடு மஞ்சளில் உள்ள குர்குமின், மூளையில் உள்ள சேதமடைந்த உயிரணுக்களை சரி செய்ய உதவும். எனவே, அல்சைமர் போன்ற மூளை பாதிப்புகள் சீராக உதவுகின்றன. குறிப்பாக, அல்சைமர் நோயால் பாதிப்படைந்தவரின் நினைவாற்றலை சீராக்க குர்குமின் உதவுகின்றது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்கப் பால்
பாலில் மஞ்சளைக் கலந்து சாப்பிட்டால் பலவித நன்மைகளை ஏற்படுத்தும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். பால் மற்றும் மஞ்சளின் கலவையை “தங்கப் பால் ” என்று அழைக்கிறார்கள். பொதுவாகவே மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி. எத்தகைய வகையான உடல் சார்ந்த நோய்களையும் இது சரி செய்ய வல்லது. நம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும், ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டிற்கும் உதவுகின்றன.

தினசரி உணவுகளில், மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். பால், சாலட், குழம்பு வகைகளில் சேர்த்து சமைக்கலாம்.