மாற்றுத் திறனாளிகளுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தற்போதுள்ள சில வசதிகள் பயன்படுத்தப்படாமலோ, சுற்றிலும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியோ இருப்பதால் அவை எளிதில் சென்றடையக்கூடிய நிலையில் இல்லை.
பாதைகள், வீதி ஓர நடைபாதைகள் போன்றவை தெருக்களின் வழியாகவும் கூட ஒருவர் பயணித்து தனது இருப்பிடத்தை அடையக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் பலகைகள் தரம் குன்றி இருப்பது அவைகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.
சாதகமில்லாத பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பு வசதிகளில் அதிகமான அழுத்தம் நிலவுகிறது.
மாற்றுத்திறனாளிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். தற்போது சிற்சில வசதிகள் செய்யப்பட்டுள்ள போதிலும் மாற்றுத்திறனாளிகள் அவற்றை நம்பிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ள இயலாத அளவிற்கு மோசமான அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தனிவகையானவை. பொது வசதிகளைப் பெறுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கென்று பிரத்யேகமான பிரச்னைகள் உள்ளன.