மாற்றுத் திறனாளிகள் – போக்குவரத்து

உலகளாவிய முயற்சிகள் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அதனை எளிதில் சென்றடையத்தக்க நிலை ஒவ்வொருவருக்கும் சமமான அளவில் இருக்க வேண்டும்.

இத்தகைய வசதிகள், சேவைகள் போன்றவற்றை மாற்றுத் திறனாளிகளும் அடைய முடிந்தால் தான் அவர்களும் முழுமையான அளவில் உள்ளடக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக கூற முடியும் .

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய போக்குவரத்து, இருப்பிடச்சூழல், அவசர சேவைகள் உட்பட பிற சேவைகளையும் பெறக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகளும் பெறுவதை அரசுகள் உறுதி செய்திட வேண்டும் என்பது முக்கியமானது.

மாற்றுத்திறனாளிகள் சமமான உரிமைகளைப் பெறுவதற்கும், சுயசார்புடன் வாழ்வதற்கும், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பங்கேற்று சமூகத்துடன் ஒன்றிணைவதற்கும் அனைத்தையும் எளிதில் அணுகக்கூடிய தன்மை என்பது மிக முக்கியமான தேவையாகிறது.

மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்புகள், உரிமைப் பாதுகாப்பு, முழுமையான பங்கேற்பு ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்தில் பாரபட்சமின்மை, வீதிகளில் யில் பாரபட்சமின்மை, சூழலில் பாரபட்சமின்மை ஆகியவற்றை ஐயத்திற்கிடமின்றி வழங்க முன்வரவேண்டும் .