உலகம் முழுவதும் மரணத்திற்கு இரண்டாவது காரணமாக உள்ள பக்கவாதம்!

உலகம் முழுவதும் மரணத்திற்கு பக்கவாதம் இரண்டாவது காரணமாக உள்ளது. கை வலுவிழத்தல்,பேசுதலில் சிரமங்கள் மற்றும் முகச் சோர்வு போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள்.

மூளையின் ஒரு பகுதியில் இரத்த ஓட்டத்தை குருதியுறை தடுப்பதால் பொதுவாக பக்கவாதம் நிகழ்கிறது.

தடைப்பட்ட இரத்த ஓட்டத்தை விரைவாக மீண்டும் ஓடசெய்யாவிட்டால் மூளை செல்கள் செத்து விடும்.

கோட்பாட்டளவில் இரத்த நீர்ம மிகைப்பு (Haemodilution), மூளைக்கு ஒக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து அளிப்பதை மேம்படுத்தவும், மற்றும் இறந்து விடும் அபாயம் உள்ள மூளை செல்களை வாழவைக்கவும் இரத்தத்தின் இரத்த ஓட்ட பண்புகளை மேம்படுத்துகிறது.

விலங்குகளில் சோதனைக்காக உண்டாக்கப்படும் பக்கவாதத்தில் இந்த சிகிச்சை மூளை திசு அழிவு(infarct) (இறந்த செல்கள் பகுதி) அளவை குறைக்கிறது. குருதி வடித்தல் (blood letting), திரவங்கள் உட்செலுத்துதல் அல்லது இரண்டையும் சேர்த்து செய்வது மூலம் இரத்த நீர்ம மிகைப்பு அடையலாம். உப்பு கரைசல் உபபோகிக்கப் படலாம் இருப்பினும் கரையாத மூலக்கூறு அதிகமாக உள்ள கூழ்மம் (colloid) கரைசல் இரத்தநாளத்துக்குள் சிறப்பாக திரவத்தை தக்கவைத்துக் கொள்ளமுடிவதால் அவை திறனான இரத்த நீர்ம மிகைப்பு பொருளாகும்.

பல நாடுகளில் இரத்த நீர்ம மிகைப்பு (haemodilution) 1970 களில் இருந்து கடுமையான பக்கவாத்திற்கு மருத்துவ சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது முதல் கடுமையான பக்கவாதத்தில் இரத்த நீர்ம மிகைப்பு பற்றி அதிகப்படியாக மருத்துவ ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திறனாய்வின் இலக்கு இரத்த நீர்ம மிகைப்பு, குருதியுறையினால் ஏற்படும் பக்கவாதம் கொண்ட மக்களின் மரணத்தைத் தடுக்க முடியுமா என்பதே.

ஆய்வு பண்புகள்

கடுமையான இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதம் உள்ளவர்கள் என்று எண்ணப்பட்ட 4174 பெரியவர்களைப் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பங்கேற்பாளர்களாகக் கொண்ட 21 ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ஆதாரம் பிப்ரவரி 2014 நிலவரப்படியாது. பல ஆய்வுகளில் குறைந்தது 3 முதல் 6 மாதம் வரை பங்கேற்பாளர்கள் தொடரப்பட்டனர். சம-கனஅளவு (isovolaemic) அளிப்புத் திட்டங்கள் (இரத்த அளவின் ஒரு பகுதிக்கு மாற்றாக திரவம் அளிப்பது) மற்றும் பல்வேறு வகையான கரைசல் பயன்படுத்தி மிக-கனஅளவு (hypervolaemic) அளிப்புத் திட்டங்கள் (திரவம் சேர்ப்பதன் மூலம் இரத்த மொத்த அளவு அதிகரித்தல்) போன்றவை குறுக்கீடுகளுள் இதில் அடங்கும்.

முக்கிய முடிவுகள்

எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இரத்த நீர்ம மிகைப்பு பயன் அளிக்கும் என்று அனைத்து ஆராய்ச்சிகளையும் இணைத்து செய்யப்பட்ட இந்த திறனாய்வு காட்டவில்லை. குறிப்பிட்ட முறை மற்றும் பல்வேறு வகையான இரத்த நீர்ம மிகைப்பு பொருள்கள், இரத்த வெளியேற்றம் சேர்த்து அல்லது இல்லாமல் பயன்படுத்துவது, போன்றவை, நன்மை அளிக்குமா என்பது பற்றி தெளிவான ஆதாரம் இல்லை. இந்த சிகிச்சையால் எந்த குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இரத்த நீர்ம மிகைப்பை கடுமையான இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்தின் வழக்கமான சிகிச்சையாக பயன்படுத்த விஞ்ஞானபூர்வமாக தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது.

சான்றின் தரம்

தனிப்பட்ட ஆய்வுகளின் தரம் வெவ்வேறு பட்டதாக இருந்தமையால், ஒட்டுமொத்த ஆதாரத்தின் தரம் மிதமானதாக இருந்தது. ஆய்வுகளுக்கு இடையே சிறுசிறு வேறுபாடுகள் இருந்தன.