அழுத்தப் புண்கள் சிகிச்சைக்கான Alginate காயங்களுக்கு மருந்திடல்!

அழுத்த சீழ் புண்கள் என்பது படுக்கை புண்கள், , படுத்த நிலை புண்கள், அழுத்த காயங்கள் என்றும் அழைக்கப்படும். இக்காயங்கள் தோல் அல்லது சிலநேரங்களில் அதன் கீழ் உள்ள திசுக்களில் ஏற்படும். அழுத்த புண்கள் வலியை ஏற்படுத்தும். தொற்று ஏற்படுவதன் காரணத்தால் மக்களின் வாழ்க்கை தரத்தை பாதிக்கலாம்.

முதுகு தண்டு காயங்களுடையவர்கள், வயதானவர்கள் மற்றும் குறுகிய கால அல்லது நீண்ட கால மருத்துவ நிலைமைகள் விளைவாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , அசைவற்றவர்கள் ஆகியோர் அழுத்த புண்கள் உருவாகும் ஆபத்து உள்ளவர்கள்.

2004 ஆம் ஆண்டில் பிரிட்டனில் அழுத்த புண்களை குணமாக்குவதில் ஆண்டின் மொத்த செலவு GBP மதிப்பில் 1.4 லிருந்து 2.1 பில்லியன்வரை என மதிப்பிடப்பட்டது.

அது மொத்த தேசிய சுகாதார சேவை செலவில் 4%க்கு சமமாக இருந்தது. அழுத்த புண்கள் உடைய மக்கள் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்க வேண்டி உள்ளது .

இது மருத்துவ செலவை அதிகரிக்க செய்கிறது. 2006ல் அமெரிக்காவில் இருந்துகிடைத்த புள்ளி விவரங்கள் மருத்துவமனையில் தங்கியவர்களில் அரை மில்லியன் நபர்களுக்கு அழுத்த புண்கள் இருந்தது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது; மொத்த மருத்துவ செலவு 11 பில்லியன் அமெரிக்கா டொலர் ஆக உள்ளது.

ஏன் அழுத்த புண்கள் சிகிச்சைக்கு அலிகட் (Alginate) மருந்திடல் பயன்படுத்தபடுகிறது?

காயக்கட்டு இடுதல் அழுத்தப்புண் சிகிச்சைக்கான தேர்வுகளில் ஒன்றாகும். பலவகை காயக்கட்டு முறைகள் பயன்படுத் தப்படுகின்றன இவைகளுக்கான செலவு மதிப்பை கொண்டு சிகிச்சை முறைகள் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடும். அலிகட் (Alginate) காயக்கட்டு வகை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டதால் சிலவகை அழுத்த புண்களால் உருவாகும் திரவத்தினை (கசிவு) உறிஞ்ச இயலும்.

ஜூன் 2014 இல் அழுத்தப் புண்கள் சிகிச்சைக்கு ஒரு வலுவான வடிவமைப்பு (சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளின்)கொண்டதாக கண்டறிவதற்கு உகந்த ஆய்வுகள் எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு ஆய்வுகளையும் தேடினோம்.

மேலும் மற்ற சிகிச்சைகளுடன் அலிகட் (Alginate) காயக்கட்டு முறையை ஒப்பிட்டோம். நாங்கள் மொத்தம் 336 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 6 ஆய்வுகளை கண்டோம்.

இந்த ஆய்வுகளில் அலிகட் (Alginate) காயக்கட்டு hydrocolloid காயக்கட்டு, மற்றொரு வகை அலிகட் (Alginate) காயக்கட்டு , dextranomer பேஸ்ட்காயக்கட்டு, வெள்ளி- Alginate காயக்கட்டு , வெள்ளி, துத்தநாகம் sulfadiazine கிரீம் மற்றும் ஒரு கதிரியக்க வெப்ப அமைப்பு சிகிச்சைகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அலிகட் (Alginate) காயக்கட்டு, மற்ற வகை காயக்கட்டுகள் அல்லது தோல் மேற்பரப்பு (மேற்பூச்சு) சிகிச்சை முறைகள், அல்லது பிற தலையீடுகளை விட அழுத்தப் புண்கள் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்க இந்த ஆய்வுகளில் எந்த ஆதாரமும் இல்லை.

பொதுவாக நாங்கள் கண்டறிந்த ஆய்வுகளில் அதிக பங்கேற்பாளர்கள் இல்லை.மற்றும் பொதுவாக முடிவுகள் நிச்சயமற்றதாக இருந்தது. சில ஆய்வின் அறிக்கைகள் அவைகள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதை பற்றிய தகவல்களை வழங்க வில்லை மற்றும் கொடுக்கப்பட்ட முடிவுகள் உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை சொல்ல கடினமாக இருந்தது.

அலிகட் (Alginate) காயக்கட்டுகள் மற்ற வகை காயக்கட்டுகள் , அல்லது மற்ற சிகிச்சைகளை விட அழுத்தப் புண்களை குணப்படுத்துவதில் சிறப்பாக இருக்கும் என்று கண்டுபிடிக்க அதிக சிறந்த தரஆராய்ச்சிகள் மேலும் தேவை. இந்த ஆய்வு அழுத்தப் புண்கள் சிகிச்சைக்கு காயக்கட்டுகள் பற்றிய திறனாய்வுகளின் தொகுப்பின் ஒரு பகுதி.