செயற்கை கால்கள் பொருத்த நிறுவனங்களிடம் கால்கடுக்க காத்திருக்கும் பாதிக்கப்பட்டோர்

பல கோடி ரூபாயில், பெரிது பெரிதாக கட்டடம் கட்டிய அரசு மருத்துவமனை நிர்வாகம், ஏழை நோயாளிகளுக்கு தேவையான முக்கிய வசதிகளை, இன்னும் ஏற்படுத்தாமல் உள்ளது. குறிப்பாக, விபத்தில், போரில் கால்களை இழப்பவர்கள், செயற்கை கால்கள் பொருத்த,  நிறுவனங்களிடம் கால்கடுக்க காத்திருக்க வேண்டியதுள்ளது.

அரசாங்க மருத்துவமனையில் இதற்கான வசதிகளை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.போர் ,வீதி விபத்துகள் அல்லது பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளால் கை, கால்களை இழப்பவர்களுக்கு, செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. குறிப்பாக சர்க்கரை நோய், விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு கால்களை இழக்கும் நோயாளிகளுக்கு,  நிறுவனங்கள் மூலமே அதிக பொருட்செலவில், செயற்கை கால்கள் தயாரிக்கப்படுகின்றன.

இலங்கையின் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கால் பொருத்தும் வசதி வெகுவாக இல்லை. தனியார் அமைப்புகள் மூலமே, செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கால்கள் தேவைப்படுவோர், இந்த அமைப்புகளிடம் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் அவயவங்களை இழந்தவர்களின் நிலைமை கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசாங்க மருத்துவமனைகளில் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயற்கை கால்கள் தயாரிக்கும் போது, காலதாமதம் ஏற்படுவதில்லை. கால்கள் அகற்றப்பட்ட பின், அவ்விடத்தின் தசைகள் சுருங்கும் இதனால் கால்களை பொருத்துவதில்தான் தாமதம் ஏற்படுகிறது,” என்றார்கள் மருத்துவர்கள் .இலங்கையின் வடக்கு கிழக்கில் தனியார் அமைப்புகள் மூலமே, செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கால்கள் தேவைப்படுவோர், இந்த அமைப்புகளிடம் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.