முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல் என்பது நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக முள்ளந்தண்டு வடத்தின் செயற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் பாதிப்பு ஆகும்.
இந்த மாற்றங்கள் காரணமாக தசைத் தொழிற்பாடு, புலனுணர்வுத் தொகுதி பாதிக்கப்படல், மற்றும் தன்னியக்க நரம்புத் தொகுதிகளின் பாதிப்புகள் காரணமாக உடலின் குறித்த பகுதிகள் செயலிழக்கும். இப்பாதிப்பு முள்ளந்தண்டுவடத்தின் எப்பகுதியிலும் நிகழலாம்.
இது முழுமையான செயலிழப்பு (complete injury) அல்லது பகுதிச் செயலிழப்புக்கு(incomplete injury) இட்டுச் செல்லலாம்.
பகுதிச் செயலிழப்பு என்பது குறித்த சில நரம்புகள் முள்ளந்தண்டு வடத்தில் செயற்பட முடியாமல் காணப்படுவதாகும்.
பாதிப்பின் இடத்திற்கும் தன்மைக்கும் ஏற்ப அதன் அளவு சிறு வலி அல்லது உணர்வின்மை முதல் உடலின் சில பகுதி செயற்பட முடியாமல் போதல் முதல் சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடின்மை வரை பரந்ததாக இருக்கலாம்.
பாதிப்புகள் அதிகமாகும்போது குணப்படுத்துவது சிரமமாவதோடு, நீண்ட காலப்பகுதியும் அவசியமாகின்றது.
இதனால் சதுரங்கவாதம்(Quadriplegia) எனும் கழுத்துப் பாதிப்பு மற்றும் கீழ்ப்பாதிவாதம்(paraplegia, diplegia),பக்கவாதம் (hemiplegia) வரை செல்லும்.
தசைப் பிடிப்பு, தொற்று, சுவாசப் பாதிப்பு மற்றும் கண்டிப்புக் காயம் என்பன இதன் பின்னிலைச் சிக்கல்களாகக் காணப்படும்.
முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல் நீண்ட நாள் பாதிப்புக்குரியதா அல்லது குறுகிய பாதிப்பு உரியதா என, அதன் பாதிப்புக் காரணத்தின் அடிப்படையிலோ அல்லது பாதிப்பின் அளவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதிப்பின் நிலையை பொறுத்து சத்திர சிகிச்சை செய்து உடைவு, கடுமையான நசிவு என்பன ஏற்பட்டிருந்தால் அகற்றப்பட வேண்டும்.
சத்திர சிகிச்சை செய்தாலோ செய்ய படாமல் விட்டாலோ அவற்றின் பின்பான இயன்மருத்துவம் (physiotherapy) சிகிச்சை முறையாக வழங்கப்பட்டால் நோயாளியின் இயங்கு நிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு பாதிப்பு ஏற்பட்ட பல நோயாளிகள் உரிய இயன்மருத்துவ சிகிச்சைகளை பெற்று நலம் பெற்றுள்ளனர்.
இதற்காக பல புனருத்தாபன நிலையங்கள் அரச வைத்தியசாலைகளில் காணப்படுகிறது…
ragama rehabilitation hospital. ampara rehabilitation centre, digana ,vavuniya போன்ற இடங்களில் இவற்றுக்கான விசேஷ வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன.
முழுமையான முள்ளந்தண்டு பாதிப்பு.
முழுமையான முள்ளந்தண்டுப் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட இடத்திற்கு கீழே சகல செயற்பாடுகளும் பாதிக்கப்படும்.
குறித்த பகுதிக்கான நரம்புகள் முள்ளந்தண்டு வடத்தின் தாழ் பகுதிகளுடன் தொடர்பறுவதனால் அப்பகுதிகளுக்கான தொழிற்பாடுகளும் உணர்ச்சியும் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கொள்ளப்படும்.
இவ்வாறான நோயாளிகளின் இயக்கத்தை பழைய நிலமைக்கு கொண்டு வர முடியாது. ஆயினும் கட்டிலில் இருந்து சக்கர நாற்காலிக்கு மாறுதல்., இருத்தல்,தமது இயற்கை கடமைகளை தாமே யாரிலும் தங்கியிருக்காது செய்தல்..சக்கர நாற்காலியில் வேறு இடங்களுக்கு தாமாக செல்தல் என்பவற்றை ஏற்படுத்த முடியும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக நம்மை தாங்கி நிற்கும், அசைவை தரும் முள்ளந்தண்டு வடத்தை பாதிப்புக்கள் ஏதும் வராமல் பாதுகாப்பதே மேன்மையானது.