மாற்றம் ஒன்றுதான் உலகிலே மாற்றம் இல்லாதது அதனால் கல்வியோ ,வீட்டு சமையல் அறையோ, குழந்தை வளர்ப்போ,பொழுது போக்கோ அல்லது அலுவலக சூழ்நிலையோ,இப்படி எதுவாக இருந்தாலும் எப்போதும் புது விடயங்களை முயற்சிக்க தயாராக இருங்கள்.
விழுவதற்கு பயப்படாதீர்கள் சரியாக சொல்லப்போனால் புதிய முயற்சிகளில் தோல்வியை தான் நிறைய சந்திக்க வேண்டி இருக்கும்.
எப்படி மிதி வண்டி ஓடகற்கும் போது கீழே விழாமல் கற்று கொள்ள முடியாதோ, அப்படி தான் புதிய விடயங்களை முயற்சிக்கும் போதும்,தோல்விகளுக்கு.(விழுவதற்கு). எப்போதும் பயப்படாதீர்கள் உடனே எழுந்து விடுங்கள் விழுந்தவுடன் எக்காரணம் கொண்டும் சிந்திக்காதீர்கள் உடனே எழுந்து விடுங்கள்.
அய்யோ நான் இப்படி விழுந்து விட்டேனே!
நம்மால் முடியுமா? இதெல்லாம் தேவையா? இப்படி ஏதாவது சிந்திக்க ஆரம்பித்தால் தொலைந்தோம்.
அதனால் விழுந்தவுடன் -எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. உடனே எழுந்துவிடுங்கள்!
எழுந்து கொள்ளும் போது கிடைத்ததை எடுத்துக்கொண்டு எழுந்து கொள்ளுங்கள்!
இப்பொழுது தான் மிக முக்கியமான கட்டம்.
விழுவது தப்பில்லை அதில் பாடம் கற்கவில்லை என்றால் -பெரிய தவறு
கிடைத்த பாடத்தை எடுத்து கொண்டு உறுதியோடு எழுந்திருங்கள்
ஒரு தவறை இரு முறைக்கு மேல் செய்தால் நாம் பின்தங்கி விடுவோம்.
அதனால் விழும் போது கற்ற பாடங்களை எப்பொதும் நினைவில் கொள்ளுங்கள்
அனுபவம் தானே சிறந்த ஆசான். கல்வியாக இருக்கட்டும், குடும்பமாக இருக்கட்டும் அல்லது வேலையாக இருக்கட்டும் இது தான் வாழ்க்கை.