சமுக உளவியல் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற பாதிக்கப்பட்டவர்கள்

கொரோனாவின் தாக்கம் இலங்கையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் நிலையில் விசேட தேவை உடையவர்கள் ,அங்கவீனர்கள் ,சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் என பலவகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் பலவகையான இன்னோரன்ன சமுக உளவியல் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

இதன் எதிரொலியாக இன்று இடம்பெற்ற சம்பவம் இருக்கிறது .இந்த நிலைமைகள் தொடராக இடம்பெறாமல் இருக்க பாதிக்கப்பட்டவர்களின் உடல் உள நலனில் அக்கறை கொள்ளவேண்டிய இக்கட்டான சூழலை கொரோனா ஏற்படுத்தியுள்ளது .

கொரோனா தொற்று பரிசோதனை செய்ய பெண் ஒருவரை சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்ற நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான விசேட தேவையுடைய 25 வயது மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் ஹோமாகம தோலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹோமாகம தோலவத்த பகுதியை சேர்ந்த குறித்த பெண் மஹரகமவில் உள்ள மீன் கடையில் கொள்வனவு செய்திருக்கிறார்.

அந்த மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்பான பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணும் களுபோவில வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவரது விசேட தேவையுடைய மகன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.