படுக்கைப்புண்கள் வராமல் தடுக்கவும்,ஆற்றவும் பேணிக்கவனிக்கும் முறைகள்

படுக்கைப் புண்கள் அழுத்தப் புண்கள் என்றும் அழைக்கப்படும். தொடர்ந்து அழுத்தப்படுவதால் தோலுக்கும் அதன் அடியில் உள்ள திசுக்களுக்கும் உண்டாகும் காயங்களே படுக்கைப் புண்கள் ஆகும். பொதுவாக படுக்கைப் புண்கள் குதிகால், கணுக்கால், இடுப்பு, பிட்டம் ஆகிய உடலை மூடியுள்ள தோலிலேயே உண்டாகின்றன.

மருத்துவக் காரணங்களால் தங்கள் படுக்கை நிலையை மாற்றிக்கொள்ள முடியாதவர்கள், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள், நீண்ட காலமாகப் படுக்கையில் தள்ளப்பட்டவர்கள் ஆகியோரே படுக்கைப்புண்கள் உண்டாகும் ஆபத்தில் இருப்பவர்கள்.

படுக்கைப்புண்கள் அதிவிரைவில் ஏற்படும். பொதுவாக சிகிச்சை அளிக்க கடினமானது. சில படுக்கைப்புண்கள் வராமல் தடுக்கவும் வந்ததை ஆற்றவும் பல பேணிக்கவனிக்கும் முறைகள் உதவலாம்.

நோயறிகுறிகள்
படுக்கைப்புண்ணின் அறிகுறிகளாவன:

சிவந்த தோல் போகப்போக நிலை மோசமாகும்
ஒரு கொப்புளம் உண்டாகிப் பின் புண்ணாகும்
அழுத்தத்தால் உண்டாகும் புண்கள் பொதுவாக வரும் இடங்கள்:
கணுக்கால்
தலைக்குப்பின்
முதுகு
பிட்டம்
முழங்கை
இடுப்பு
குதிகால்
தோள்
அழுத்தத்தால் ஏற்படும் புண்கள் ஆழமான திசுக் காயங்களே. இவை ஊதா அல்லது அரக்கு நிறத்தில் இருக்கும். படுக்கைப்புண்கள், அழுத்தத்தால் மெல்லிய திசுக்கள் சிதைவடைவதால் ஏற்படும் தோலின் ஒரு பகுதியாகவோ அல்லது குருதி நிரம்பிய கொப்புளமாகவோ காணப்படும். அருகில் இருக்கும் திசுக்களோடு ஒப்பிடும்போது சுற்றியுள்ள பகுதி புண்ணாகவோ, கட்டியாகவோ, கூழ்போன்றோ, சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருக்கும்.

காரணங்கள்
தோலில் ஏற்படும் அழுத்தத்தால் அப்பகுதியில் இரத்த ஓட்டம் குறையும். போதுமான அளவுக்கு இரத்தம் கிடைக்காததால் தோல் உயிரற்றுப் போய் புண் உண்டாகிறது.

ஒருவருக்கு படுக்கைப்புண்கள் உண்டாகக் காரணங்கள்:

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதால் அல்லது நீண்ட நாள் படுக்கையில் இருப்பதால்
முதுகுத் தண்டு அல்லது மூளைக் காயம் அல்லது உடல்மரப்பு போன்ற நோய்களால் உதவியின்றி ஒருவர் தமது உடலின் சில பாகங்களை அசைக்க முடியாதபோது
நீரிழிவு அல்லது நரம்பு நோய்கள் உட்பட ஏதாவது ஒரு நோயால் ஒருவருக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது
அல்ஜைமர் நோய் அல்லது வேறு மனநிலையைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டால்
தோல் மெல்லியதாக இருத்தல்
சிறுநீர் அல்லது மலம் கட்டுப்படுத்த முடியாமை
ஊட்டச்சத்துக் குறைபாடு
நோய்கண்டறிதல்
ஒருவர் படுக்கையில் ஆகிவிட்டாலோ சக்கர நாற்காலியைப் பயன்படுத்தினாலோ மருத்துவர் அல்லது பணியாளர் படுக்கைப்புண் வந்துள்ளதா என்று நோக்குவார். தோல் வெடிப்பின் கடுமை பின்வருமாறு வகைப்படுத்தப்படும்:

கட்டம் 1: தோல் வெடிப்பின்றி அசாதாரணமான சிவப்பாக இருத்தல். இந்நிலை மாற்றக்கூடியது.

கட்டம் 2: இச்சிவப்பு வெடிப்பாக, கொப்புளமாக, இலேசான பள்ளமாக மாறுதல். இந்நிலையும் மாற்றக்கூடியதே.

கட்டம் 3: ஒரு பள்ளமான புண் தோலுக்குள் பரவுதல். இந்நிலை ஆபத்தானது.

கட்டம் 4: தோல் இழப்புடன் தசை, எலும்பு, தசைநார்கள் அல்லது மூட்டுப்பந்துகள் ஆகிய பிடிமான அமைப்புகளில் மிகுந்த சிதைவு. இது மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலை.

நோய் மேலாண்மை
படுக்கைப்புண்ணுக்கான மருத்துவம் புண்ணின் கடுமைக்கு (கட்டம்) ஏற்ப அமைகிறது. கடுமையைப் பொறுத்து குணப்படுத்துவதற்கு பல்வேறு அணுகுமுறையைக் கையாளலாம். செயற்கை கட்டிடல், உப்புக் கட்டிடல், அசட்டிக் அமில அழுத்துகை, பல்வேறு எதிர்நுண்ணுயிர் கட்டிடல் போன்ற மருந்திட்டுக் கட்டுப்போடும் (dressings) முறைகள் உண்டு (படுக்கைப் புண்களில் எளிதில் தொற்று ஏற்படும்)

கடுமையான புண்களுக்கு அறுவை மருத்துவம் மூலம் உயிரற்றத் தோல் பகுதி அகற்றப்பட வேண்டி இருக்கும். மருத்துவம் ஆனாலும் தடுப்பு ஆனாலும் அழுத்தத்தைத் தவிர்க்க அடிக்கடி நிலையை மாற்றுவதே முக்கியமான படியாகும்.

தடுப்புமுறை
உடலிடை ஒரே இடத்தை அழுத்துவதைத் தவிர்க்கவும், திசுக்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் தொடர்ந்து நிலை மாற்றி அசையவும் நகரவும் வைப்பதே படுக்கைப் புண்களைத் தடுக்கும் சிறந்த வழி. நகர முடியவில்லை என்றால் நோயாளியை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை நிலைமாறிப் படுக்க உதவி செய்ய வேண்டும். நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நிலை மாற்ற வேண்டும். ஒருவர் அசைய முடியாமல் இருந்தால் தலையணையோ நுரைமெத்தைத் திட்டுக்களோ பயன்படுத்தலாம். தசை விறை
ப்பைத் தடுக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மூட்டுப்பிணைப்பு, அசைவு, தசைநிறை ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வரம்புள்ள உடல் பயிற்சிகள் உதவும்.
படுக்கை 30 டிகிரிக்கு மேல் உயர்ந்து இருக்கக் கூடாது (சாப்பிடும்போது தவிர)