சுய மதிப்பீட்டு மாநாடு
பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்னும் தலைப்பில் கடந்த வருடம் இதே நாளில் (14/06/2019) பாதிக்கப்பட்டோரும் அவர்களோடு பயணிப்போரும் இணைந்து ஒரு மாநாடு நடாத்தப்பட்டது.
எம்மை நாமே சுய மதிப்பீடு செய்ய வேண்டும், அதன் மூலம் நாம் எம்மை வளப்படுத்திக் கொள்ள முடியும். இந்த முயற்சி வருடா வருடம் நடாத்தப்படுவது எனவும் நாம் கடந்த வருடம் முடிவெடுத்தோம்.
உலகின் இன்றைய நிலையில் இவ்வாறான அடுத்த மாநாட்டை இப்போது நடாத்த முடியாது.
ஆனால் சென்ற வருட மாநாட்டின் கோரிக்கைகளும் பிரகடணங்களும் இன்றும் உயிர்ப்புடன் தான் இருக்கின்றது.
பாதிக்கப்பட்டோரை பிரதிநிதித்துவப்படுத்துவோரையும், அவர்களுக்காக பாடுபடுவோரினதும் தகவல்களை அடக்கிய ஒரு இணையத்தை வடிவமைக்க வேண்டும் என மாநாட்டில் பேசினோம். அதற்கான முயற்சியை மேற்கொள்கின்றோம்.
கடந்த மாநாட்டில் 80 அமைப்புகள், வடக்கு கிழக்கு மாகாண சமூக சேவை பணிப்பாளர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அரச அதிபர், மற்றும் அரச அதிபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், மனித உரிமை ஆணையம் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டை DATA அமைப்பும் யாழ் ரொட்டார்க் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.