பாதத்தின் பயணம்…….!! – தேடலுடனான ஒரு தொடர் பயணம்….

பாதத்தின் பயணம்………

அங்கங்கள் அறுக்கப்பட்டு செயற்கை அங்கங்கள் பொருத்தப்பட்டு வாழ்வை நகர்த்தும் பல உறவுகள் எம்மோடு வாழ்கின்றார்கள். அன்றாடம் அவர்களை காண்கின்றோம்.

அப்படி வாழ்வோரினது வாழ்வை தரிசிக்கும் ஒரு முயற்சியை ஆரம்பிக்கின்றோம்.

எங்கு இப்படியான செயற்கைக்கால்கள் கிடைக்கின்றன..

அது எல்லோருக்கும் கிடைக்கின்றதா ?

அவர்களின் வாழ்வு குறித்தான சரியான புரிதல் நம்மிடமிருக்கின்றதா?

இந்தப் பாதங்கள் பழுதடைந்தால் அதை திருத்திக் கொடுக்கும் இடங்கள் எங்கெல்லாம் உள்ளன ?

இது சக்கர நாட்காளிகலுக்கும் பொருந்தும் அவற்றை பழுதுபார்க்கும் இடங்கள் எவை? புதிய சக்கர நாட்காளிகள் எங்கெல்லாம் கிடைக்கும் ?

ஊன்றுகோல்கள் வெண்பிரம்புகள் என மாற்றுத்திறனாளிகளை தாங்கி நிற்கும் பெரும் பணியைச் செய்யும் சுமைதாங்கிகள் குறித்தும் அவற்றை மாற்றுத்திறனாளிகள் எப்படி பெறுகிறார்கள் எனவும் பேசுவோம்.

செயற்கைக்கால், பொய்க்கால் , பிளாஸ்டிக் கால் … இன்னும் என்னென்ன பதங்கள் பாவிக்கப்படுகின்றன்…..

பாதங்கள் —– பாவிப்போரும் அவர்களுக்கு உதவுபோரினதும் கருத்துக்களை தேடும் நீண்ட தொடரில் நீங்களும் எழுதலாம்…….

உள்ளவற்றை உள்ளபடி எழுதுவோம்.

இந்த எழுத்துக்கள் ஒருவேளை இதற்காக ஏங்குவோர்க்கு உதவினால் எங்கள் எழுத்தும் உயிர் பெறும். காயங்களை ஆற்றும்…