பசியாற்றும்_பயணம்…… 5ம் நாள்
கொரோனா நிவாரண நிதியாக புலம்பெயர் உறவுகளிடம் சேகரிக்க பட்ட £5 பெறுமதியான பொதிகளை DATA நிறுவனத்தார் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 272
முல்லைத்தீவு – 57
மட்டக்களப்பு – 80
யாழ்ப்பாணம் – 80
கிளிநொச்சி – 61
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதிகளை கையளிக்க ஆரம்பித்தோம். முலைத்தீவில் பொதிகளை தயாரிப்பதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் திரு. திவாகரன் உதவியதோடு பொதிகளை கையளிப்பதிலும் பங்கேற்றார். பொதிகளை விநியோகிப்பதற்கு திருமதி சஜிராணி வாகன வசதி செய்து உதவினார்.
மட்டக்களப்பில் பொதிகள் கையளிப்பு இன்றும் தொடர்ந்தது. வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் பொதிகள் கையளிக்கப்பட்டன.