DATA – பசியாற்றும்_பயணம்…… 4ம் நாள்
கொரோனா நிவாரண நிதியாக புலம்பெயர் உறவுகளிடம் சேகரிக்க பட்ட £5 பெறுமதியான பொதிகளை DATA நிறுவனத்தார் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதுவரை கொடுக்கபட்ட பொதிகள்: 221
யாழ்ப்பாணம் – 80
கிளிநொச்சி – 61
மட்டக்களப்பு – 80
இன்று மட்டக்களப்பில் காத்தான்குடி, ஆரயம்பதி பிரதேசங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று யாழ்ப்பாணத்தில் சிவபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பெண்_தலைமை_குடும்பம், மற்றும் முதியோர்களுக்கு பொதிகள் கொடுக்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.வி செல்வம் அவர்களின் ஆலோசனையின் பேரில் இக்கிராமத்தில் பொதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் கிளிநொச்சியில் அறிவியல்_நகர் பிரதேசத்தில் பொன்னகர் கிராமத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கும் , பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் பொதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.