அம்பாறை, சம்மாந்துறை கல்வி வலயத்தின் அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தனி அலகாகக் கொண்டு இயங்கும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு ஜப்பான் தூதரகம் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான தளபாடங்களை வழங்கியுள்ளது.
இதற்கான நிகழ்வு அதிபர் எம்.ஏ.றஹீம் தலைமையில் புதன்கிழமை இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சியாமா சியாஸின் வேண்டுகோளின் பெயரில் ஜப்பான் தூதரகம் முன்னெடுக்கும் இவ்வேலைத் திட்டத்தில் இப்பாடசாலையில் தனியான கற்றல் வள நிலையமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
அந்நிலையத்திற்கான தளபாடங்களே இவ்வாறு கையளிக்கப்பட்ட நிலையில் பிரதேச சபை உறுப்பினர் சியாமா சியாஸ் உள்ளிட்ட திட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இத்தளபாடங்கள் விஷேட தேவையுடையோருக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டவையாகும்.