வாழ்வாதார சூழ்நிலையை மீள்பரிசீலனை செய்ய கோரிக்கை !

இலங்கையின் தற்போதைய  அரசில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒட்டு மொத்தமாக பாதிகப்பட்டுள்ள  அனைவரின் விபரங்களும் சேகரி க்கப்பட்டு, அவர்களின் தற்போதைய வாழ்வாதார சூழ்நிலையை மீள்பரிசீலனை செய்ய சமூக சேவைகள் திணைக்களம் முனைய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
புதிய அரசாங்கம் மாகாண சபைகள் ஊடாக ஒட்டு மொத்த பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைதிரட்ட வேண்டும். அவை  மாவட்ட ரீதியாக முழுமைப் படுத்தப்படும் போது அவர்களுக்கு என்ன உதவி தேவை என்பதை அவர்களுக்கு உதவிகளை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் இலகுவாக தரவுகளை பெற்று கொள்ள முடியும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.