உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பற்றிக்டிரஞ்சன் தலைமையில் உதவி ஆணையாளர்கள், வடமாகாண உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்தித்து கலந்துரையாடினர்..
ஆணையாளர் தலைமையில் உதவி ஆணையாளர்கள் வடமாகாண உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொ.ண்ட கலந்துரையாடலில் DATA அமைப்பினர் கலந்து கொண்டு அடிப்படை வசதிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் தேவைப்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
இதுவரைக்கும் வடமாகாணத்தில் உள்ள 34 சபைகளில் 31 சபைகள் மற்றும் பொது இடங்கள் பார்வையிடப்பட்டு அதன் நிலைப்பாடுகளையும், தேவைப்பாடுகளையும் அமையப்பெறாமையினால் எதிர்கொள்ளும் சவால்களையும் தெளிவுபடுத்தியிருந்தோம். விடயங்களை கவனத்திற் கொண்டு அனைத்து இடங்களிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக குறிப்பிட்டதோடு அதன் முன்னேற்றங்களையும் அறியத்தருவதாக குறிப்பிட்டிருந்தார்கள். பொதுக்கட்டடங்களுக்கான அணுகும் வசதிகள் இன்மையால் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கள ஆய்வின் மூலம் உள்ளூராட்சி ஆணையாளர் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு செயற்படுத்துமாறு கோரிக்கை முன்வைப்பு