மாநாட்டின் பின்னரான தொடர் சந்திப்புக்களின் அடிப்படையில் யாழ்/ மாவட்ட பிரதேச சபைகளிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்.

பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும்… சுயமதிப்பீட்டு மாநாடானது கடந்த 14.06.2019 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அனைத்து வகையான பாதிக்கப்பட்டோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை செயற்படுத்தும் நோக்கோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பிரசே சபைகளுக்கும், பொது கட்டடங்களுக்கும் DATA அமைப்பினர் விஜயம் மேற்கொண்டு பிரதேச செயலாளர், தவிசாளர்கள் மற்றும் உதவித்தவிசாளர் ஆகியோரை சத்தித்து பொதுவான பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்ததிருந்தனர்.

பொதுவாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
1. பாதிக்கப்பட்டோருக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டுமான வசதிகள் தொடர்பாக
பேசப்பட்டது.
2. விசேடமாக பொது கட்டடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றிற்கான அணுகும் வசதிகள்
தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
3. அணுகும் வசதி கொண்ட பொது மலசலகூடங்கள் இன்மையால் ஏற்படுகின்ற
அசௌகரியங்களையும், அதன் தேவைப்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.
4. வேலை வாய்ப்பு தொடர்பாக பேசப்பட்டது.

5. எதிர்காலத்தில் அமையவிருக்கும் கட்டடங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படும் போது கவனிக்க
வேண்டியவை தொடர்பாகவும் அமையப்பெற்றிருக்கும் கட்டடங்களை மாற்றியமைத்தல்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சந்திப்பினை மேற்கொண்ட இடங்கள்
1. நல்லூர் பிரதேச சபை தவிசாளர் திரு தா.தியாகமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு…
2. வலி கிழக்கு (புத்தூர்) பிரதேச சபை தவிசாளர் திரு தியாகராசா நிரேஸ் அவர்களுடனான சந்திப்பு…
3. வலிகாமம் வடக்கு பிரதேச சபை நிர்வாக உத்தியோகத்தர் திருமதி யோகராணி ஹீஉதயமோகன்
அவர்களுடனான சந்திப்பு…
4. வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. கருனாகரன் தர்ஷன் அவர்களுடனான சந்திப்பு…
5. வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு கருணாகரன் குருமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு…
6. ஊர்காவற்றுறை பிரதேச சபை செயலாளர் திரு அழகேசன் பிரதீபன் அவர்களுடனான சந்திப்பு…
7. பருத்திதுறை நகர சபை தவிசாளர் திரு யோசப்பு இருதயராசா அவர்களுடனான சந்திப்பு…
8. வடமராட்சி வடக்கு பிரதேச சபை (புலோலி) தவிசாளர் திரு அரியரட்னம் சாள்ஸ் அரியகுமார்
அவர்களுடனான சந்திப்பு…
9. வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் திரு கோ.கருணானந்தராசா அவர்களுடனான சந்திப்பு…
10. வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு யு.வினோத் அவர்களுடனான சந்திப்பு…
11. வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு த.நடனேந்திரன் அவர்களுடனான சந்திப்பு…
12. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு அ.ஜெயநேசன் அவர்களுடனான சந்திப்பு…
13. சாவகச்சேரி நகர சபை தவிசார் திருமதி இராமநாதன் நவமங்கை அவர்களுடனான சந்திப்பு…
14. சாவகச்சேரி கொடிகாமம் பிரதேச சபை தவிசாளர் திரு கந்தையா வாமதேவன் செயலாளர் திருமதி
நிருஜா வாசுதேவன் அவர்களுடனான சந்திப்பு…
15. காரைநகர் பிரதேச சபை செயலாளர் திரு ளு.பாலரூபன் அவர்களுடனான சந்திப்பு…